பொது வாக்கெடுப்பில் தோல்வியை ஒப்புக்கொண்டார் இத்தாலி பிரதமர் மெலோனி
நமது நிருபர்
நீதித்துறை சீர்திருத்தம் தொடர்பான கருத்து வாக்கெடுப்பில் இத்தாலி பிரதமர் மெலோனி தோல்வியை தழுவினார். எனினும் நாட்டின் பிரதமராகத் தொடர்வதாக உறுதியளித்துள்ளார்.
இத்தாலியில் நீதித்துறை சீர்திருத்தம் தொடர்பான கருத்து வாக்கெடுப்பு மார்ச் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் பணிக்காலப் பிரிவினை உள்ளிட்ட முக்கிய மாற்றங்கள் குறித்து வாக்காளர்களின் கருத்தைக் கேட்பதற்கு நடத்தப்பட்டது.
எதிர்பார்த்ததை விட 58 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுப்பதிவானது. அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு (46.5%), எதிர்ப்பு (53.5%) என ஓட்டுக்கள் பதிவாகி இருந்தது. நீதித்துறை சீர்திருத்தம் தொடர்பான அரசியலமைப்பு பொது வாக்கெடுப்பில் தோல்வியை இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஒப்புக்கொண்டார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது:
இத்தாலியர்கள் முடிவெடுத்துவிட்டனர். நாங்கள் இந்த முடிவை மதிக்கிறோம். இந்த பொது வாக்கெடுப்பின் முடிவு இத்தாலியை நவீனமயமாக்குவதற்கான ஒரு நழுவிய வாய்ப்பு என கருதுகிறேன். தேசத்தின் நலனுக்காகத் தீவிரத்துடனும் உறுதியுடனும் தொடர்ந்து பணியாற்றுவேன்.
இந்த முடிவுகள் எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளில் மாற்றத்தை கொண்டு வராது. நடுநிலையை உறுதி செய்வதற்கும், இத்தாலியின் சீர்குலைந்த நீதி அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் தற்போதைய நடவடிக்கைகள் மிகவும் அவசியமாகும். இவ்வாறு ஜார்ஜியா மெலோனி கூறினார்.
வாசகர் கருத்து (7)
duruvasar - indraprastham,இந்தியா
24 மார்,2026 - 11:48 Report Abuse
தமிழ்நாட்டு மெலோனி வருத்தப்பட்டிருப்பார் 0
0
Reply
Anand - chennai,இந்தியா
24 மார்,2026 - 11:38 Report Abuse
ஐரோப்பிய நாடுகள் மற்றும் அதன் தலைவர்கள் உக்ரைனுக்கு முட்டுக்கொடுத்தே வீணாய் போய்விட்டன. 0
0
Reply
sundararajan - bangalore,இந்தியா
24 மார்,2026 - 11:05 Report Abuse
போலி செக்யூலரிஸம் இத்தாலி மக்களின் மனதில் உள்ளது. நல்லது செய்ய முயற்சிக்கும் ப்ரதமருக்கு இது ஒரு பின்னடைவு. இருந்தாலும் இவர் வலுவுடன் மீண்டு வருவார். 0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
24 மார்,2026 - 10:36 Report Abuse
எங்க சிரிப்பு கமாண்டரும் ஒப்புக்கொண்டார். அதனாலதான் அதிமுக கூட்டணி பத்தியே தொடர்ந்து பேசுறார் .... 0
0
Reply
அப்பாவி - ,
24 மார்,2026 - 09:28 Report Abuse
அடுத்த எலக்ஷன் வரதுக்கு முன்னாடியே காலி. 0
0
Reply
rama adhavan - chennai,இந்தியா
24 மார்,2026 - 09:25 Report Abuse
வெற்றி பெற அங்கும் பணம் தானா? நமது... மாடல் பயிற்சியை உலகம் முழுக்க பள்ளியில் பாடமாக வைக்க முயற்சிக்கவும். நம்மால் முடிந்தது மாநிலத்தை குட்டிச்சுவர் ஆக்கியாய் விட்டது. பிற மாநிலங்களையும், ஏன் உலகத்தையும் குட்டிச்சுவர் ஆக்கலாம். மாடல் புகழும் பரவும். 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
24 மார்,2026 - 09:00 Report Abuse
வருத்தித்திற்குள்ளாகும் செய்தி. 0
0
Reply
மேலும்
-
ஐ.டி., நிறுவனம் அருகே ஆண் சடலம் மீட்பு
-
உயிரினும் மேலானது தேசப்பற்று :ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பேச்சு
-
வாந்தி, காய்ச்சல் பாதிப்பு: 2 வயது குழந்தை இறப்பு
-
ஆலந்துாரில் 4வது முறை போட்டியிடும் அன்பரசன்
-
மனைவி - மகள் கழுத்தறுத்து கொலை :நடத்தையில் சந்தேகத்தால் கணவர் வெறி
-
கோவில் உண்டியலை திருடியவர் கைது
Advertisement
Advertisement