தலைவலி போய் திருகுவலி ஆரம்பம்; புதுவையில் தேமுதிகவும் போட்டி
புதுச்சேரி: புதுச்சேரி இண்டி கூட்டணியில் திமுக, காங்., கம்யூ., வி.சி.க., கட்சிகளுக்குள் இருக்கும் பிரச்னைகளே இன்னும் தீராத நிலையில், தேமுதிகவும் போட்டியிடும் என்று பிரேமலதா அறிவித்தார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல், அடுத்த மாதம் ஏப்ரல் 9ம் தேதி நடக்கவுள்ளது. என்ஆர் காங்கிரஸ் - பாஜ இடையே தொகுதி பங்கீடு முடிவாகி உள்ளது. என்ஆர் காங்கிரஸ் 16, பாஜ 10, அதிமுக 2 லஜக 2 தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது. இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெறும் சூழலிலும் இண்டி கூட்டணியில் தொகுதி பங்கீடு விவகாரம் முடிந்தபாடு இல்லை.
நீண்ட இழுபறிக்கு பிறகு இண்டி கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியானது. காங்கிரஸ் -16, திமுக-12, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும் முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு சீட் தர மறுக்கப்பட்டதாக கூறி, மாநில தலைவர் வைத்திலிங்கம் வீட்டு வாசலில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க, திமுக, காங்கிரஸ் கட்சிகள் முடிவு செய்திருந்த நிலையில், 2 தொகுதிகளில் அந்த கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இண்டி கூட்டணியில் திமுக, காங்., கம்யூ., வி.சி.க., கட்சிகளுக்குள் இருக்கும் பிரச்னைகளே இன்னும் தீராத நிலையில், தேமுதிகவும் போட்டியிடும் என்று பிரேமலதா அறிவித்து இருக்கிறார்.
இந்த முடிவை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை பிறகு பிரேமலதா எடுத்துள்ளார். இது குறித்து நிருபர்களிடம் பிரேமலதா கூறியதாவது: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தேமுதிக போட்டியிடுகிறது. தேமுதிகவினர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். திமுக, காங்கிரஸ் கூட்டணியில் தான் புதுச்சேரியில் தேமுதிக போட்டியிட உள்ளது. தேமுதிக சார்பில் யார் போட்டி என்பது மாலை 3 மணிக்கு தெரிய வரும், என்றார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு சீட் தர மறுப்பு; மாநில தலைவர் வைத்திலிங்கம் வீட்டு வாசலில் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த முற்றுகை போராட்டம் தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
வாசகர் கருத்து (22)
ஆரூர் ரங் - ,
23 மார்,2026 - 21:54 Report Abuse
கேப்டன் கட்சி பாண்டியில் மிகப்பெரிய அளவில் வாக்குகளைப் பெற்று தனியாட்சி நடத்தும். கண்ணுக்கெட்டிய தூரம் எதிர்கட்சிகளே இருக்க மாட்டார்கள். வாழ்க காட்டன் அண்ணி புகழ். 0
0
Reply
SIVA - chennai,இந்தியா
23 மார்,2026 - 20:32 Report Abuse
உள்ளதை அள்ளித்தா என்ற படத்தில் ஒரு வசனம் வரும் அவனையே கடத்தி அவன் பெண் கிட்டயே மிரட்டி
காசு வாங்கி பணக்கரானாகி அவன் கிட்டயே போய் பெண் கேட்கிறோம் என்று ..... 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
23 மார்,2026 - 18:55 Report Abuse
இந்த அம்மாவுக்கு அங்க என்ன செல்வாக்கு ? 0
0
Reply
Modisha - Chennai ,இந்தியா
23 மார்,2026 - 18:41 Report Abuse
பாண்டிச்சேரியில் ' விஜயகாந்த்' ரசிகர்கள் நிறைய உண்டு. 0
0
Reply
Modisha - Chennai ,இந்தியா
23 மார்,2026 - 18:39 Report Abuse
தேமுதிக வை திமுக பக்கம் திருப்பி விட்ட பிஜேபி யின் ராஜதந்திரம் சூஊஊப்பர் . 0
0
Reply
கடல் நண்டு - Dhigurah,இந்தியா
23 மார்,2026 - 18:27 Report Abuse
அரசியல் களத்தில் குறுக்கும் மறுக்கும் ஓடும் அணிலை போல .. ஆமை .. 0
0
Reply
vadivelu - thenkaasi,இந்தியா
23 மார்,2026 - 16:09 Report Abuse
alla tha they have is just the support of Naidus around 1%. dreaming big 0
0
Reply
Bhaskaran - Chennai,இந்தியா
23 மார்,2026 - 16:04 Report Abuse
பாண்டிசேரிக்கு தனியாக ஸ்வீட் box தந்துதான் ஆகணும் 0
0
Reply
ரவி - ,
23 மார்,2026 - 15:32 Report Abuse
ஸ்டாலினை விட எடப்பாடி ராஜதந்திரி என்று தே.மு.தி.க விசயத்தில் நிரூபித்து விட்டார். கடும் போட்டியில் எடுக்கப் பட்ட பிரேமலதா தி.மு.க கூட்டணிக்கு வந்த பின்புதான் நன்கு போய் கொண்டிருந்த தி.மு.க கூட்டணியில் முட்டல், மோதல்கள் ஏற்பட்டன.வேல் முருகன் வெளியேறியே விட்டார். கம்யூனிஸ்ட்,வி.சி.க முறுக்கிக் கொண்டு நிற்கின்றன.தே.மு.தி.கவை காட்டி காங்கிரசை பயமுறுத்தலாம் என நினைத்தார் ஸ்டாலின் . ஆனால் த.வெ.கவைக் காட்டி ஸ்டாலினை பயமுறுத்தி ஒரு ராஜ்யசபா மற்றும் மூன்று தொகுதிகளை கூடுதலாக பெற்று விட்டது காங்கிரஸ். இந்தம்மா இங்க பண்ணுன குழப்பம் பத்தாதுன்னு பாண்டிச்சேரில வேற போய் குழப்புகிறது. தமிழ் நாட்டிற்கு பெட்டி தனி பாண்டிச் சேரிக்கு பெட்டி தனி என தனிக் கணக்கு போடுகிறதோ என்னவோ? 0
0
Reply
Haja Kuthubdeen - ,
23 மார்,2026 - 15:19 Report Abuse
திமுக விற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாம்.தேமுதிக இல்லையென்றால் வெற்றி பெருவது கடிணம் 0
0
Reply
மேலும் 12 கருத்துக்கள்...
மேலும்
-
இன்று இனிதாக (29.03.2026) விருதுநகர்
-
தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
-
கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியில் தொடரும் புதுமுக வேட்பாளர் 'பார்முலா'
-
டாப்ஸ், சிறப்பு டெட் திட்டங்களால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு செக் வைக்கும் தி.மு.க.,
-
கல்குவாரி, கிரஷர் லாரிகளால் 3 ஆண்டுகளில் 30 பேர் உயிரிழப்பு!
-
வேட்பாளர் பட்டியலுடன் கோவிலில் வழிபட்ட முதல்வர்
Advertisement
Advertisement