இன்னும் 30 நாட்களில் இருந்த இடம் தெரியாமல் திமுக தூக்கியெறிப்படும்; நயினார்
சென்னை: தந்தை கொலை செய்யப்பட்டதால் மனமுடைந்து போன மகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை; திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்புப் பகுதியில் பட்டியலின விவசாயி ஆறுமுகம் கொலை செய்யப்பட்டு ஆறு நாட்களாகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத விரக்தியில் அவரது மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
கொலை செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல் காவல்துறை மெத்தனமாகச் செயல்பட்டதால், இன்று மேலும் ஒரு அப்பாவி உயிர் பலியாகியுள்ளது. திறனற்ற திமுக ஆட்சியில் கடந்த ஐந்தாண்டுகளாகக் குற்றங்கள் பெருகிய போதெல்லாம் வேடிக்கை பார்த்த கொடூரம் போதாதென்று, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்பும், வேடிக்கை பார்க்கிறதா தமிழகக் காவல்துறை?
இன்னும் 30 நாட்களில் இருந்த இடம் தெரியாமல் திமுக அரசைத் தமிழக மக்கள் தூக்கியெறியவுள்ள நிலையில், இனியும் ஏவல்துறையாகச் செயல்படாது, தமிழகக் காவல்துறை உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! சட்டம் ஒழுங்கை உறுதி செய்ய வேண்டும்!, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கேவல சாராய வியாபார கட்சிக்கு தமிழ்நாட்டில் மாற்று இருக்கிற மாதிரி தெரியவில்லை இவர் கனவு காண இவருக்கு உரிமை உண்டு
வேருடன் பிடுங்கி வீசப்படவேண்டிய அவலமான ஆட்சி
தி மு க வை அழிக்க நினைப்பவன் அழிந்து போனதுதான் வரலாறு
தி மு க வை அழிக்க நினைப்பவன் அழிந்து போனதுதான் வரலாறுமேலும்
-
இன்று இனிதாக (29.03.2026) விருதுநகர்
-
தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
-
கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியில் தொடரும் புதுமுக வேட்பாளர் 'பார்முலா'
-
டாப்ஸ், சிறப்பு டெட் திட்டங்களால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு செக் வைக்கும் தி.மு.க.,
-
கல்குவாரி, கிரஷர் லாரிகளால் 3 ஆண்டுகளில் 30 பேர் உயிரிழப்பு!
-
வேட்பாளர் பட்டியலுடன் கோவிலில் வழிபட்ட முதல்வர்