பட்டியலின விவசாயி படுகொலைக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை? திருமாவுக்கு இபிஎஸ் கேள்வி
சென்னை: திருநெல்வேலி பட்டியலின விவசாயி படுகொலை சம்பவம் தொடர்பாக திருமாவளவன் போன்றோர் ஏன் குரல் கொடுக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை: கடந்த 5 ஆண்டுகளாக, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், திமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு சீர்கேடுகள் குறித்து நான் அறிக்கைகள், சமூக ஊடகங்கள், செய்தியாளர் சந்திப்புகள், சட்டமன்ற உரைகள் வாயிலாக தொடர்ந்து சுட்டிக்காட்டி, உரிய முறையில் ஆட்சியை நடத்த வலியுறுத்தி வந்துள்ளேன். முதல்வராக இருந்த ஸ்டாலின், அவர் நடத்திய திமுக காட்டாட்சியோ, திருந்தியதாகவும் தெரியவில்லை; எதையும் திருத்தியதாகவும் தெரியவில்லை. எனவே தான் இம்முறை உங்களை நோக்கி இந்த பதிவினை வெளியிடுகிறேன்.
போராட்டம்
திருநெல்வேலி அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், கடந்த 6 நாட்களுக்கு முன்பு மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. நேற்றைய தினம் அந்த விவசாயியின் 23 வயது மகள் தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இதைத் தொடர்ந்து உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட, 3 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சி தமிழ்நாட்டை நிறுத்தியுள்ள இடம் இது தான். இங்கே குற்றங்கள் தடுக்கப்படாது.
ஏன் பேசவில்லை?
குற்றவாளிகள் மீது நடவடிக்கை இருக்காது, அதுவும் குற்றவாளிகளுக்கு ஆளுங்கட்சி தொடர்பு இருந்தால் சொல்லவே வேண்டாம். ஊருக்கே சமூகநீதி பாடமெடுக்கும் திமுக ஆட்சியில், பட்டியலின மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதற்கு வேங்கைவயல் முதல் நாங்குநேரி பெரும்பத்து வரை பல்வேறு எடுத்துக்காட்டுகள் உள்ள நிலையில், தற்போது இச்செய்தியும் சாட்சியாக உள்ளது. விளிம்புநிலை மக்களின் குரலாக தன்னைக் காட்டிக்கொள்ளும் திருமாவளவன் போன்றோர், இதைப் பற்றி ஏன் பேசவில்லை? ஏன் குரல் கொடுக்கவில்லை? தங்கள் சீட்டுகளுக்காக திமுகவிடம் பேசுபவர்கள், இதுபோன்ற உண்மையான மக்கள் பிரச்னைகளையும் பேசலாமே?
செய்வீர்களா?
இது தான் திமுக-வின் கேடுகெட்ட ஆட்சி; இது தான் திமுக கூட்டணி கட்சிகளின் லட்சணம். தேர்தல் விதிகள் அமலில் வந்துவிட்டதை உணர்ந்து, திமுக அரசு போலீசார் போலவே செயல்படாமல், தமிழக போலீசாருக்கு இருக்கும் நற்பெயரைக் காப்பாற்றும் வகையில் செயல்பட்டு, குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.
மக்களே- இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு உங்களிடம் தான் இருக்கிறது. நான் கேட்கப்போவது, உங்கள் பாதுகாப்பிற்கான உத்தரவாதம். இத்தனை ஆண்டுகள் உங்கள் மனதில் இருந்துகொண்டிருந்த அச்சத்தை உடைத்தெறிவதற்கான ஒரே வழி. தமிழகம் வாழ வேண்டும் என்றால், திமுக வீழ வேண்டும், செய்வீர்களா? இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.
குரல் கொடுக்கிறதா ???? வாயை பணத்தால் கட்டி வெச்சிருக்கு திமுக ......
பட்டியலின மக்களின் ஓட்டுக்காக மட்டும் வாயில் வடை சுட்டு , தன் இருப்பை காட்டிக்கொள்ள அப்பப்ப அறிக்கை விடும் இவரை ஒரு அரசியல் தலைவராக இ பி எஸ் கருதுவது, அவரின் அரசியல் முதிர்ச்சியற்ற செயலாகவே கருதப்படும் ..
ஏன் வாயத் தொறக்கல. இது என்னய்யா கேள்வி. பெட்டி வந்தாச்சுல்லே. அப்புறம் பெட்டிப் பாம்பா அடங்கிதானே கிடக்கணும். நெலவரம் தெரியாம பேசாதீங்க.
தமிழன் நாசமா போனா திராவிட திமுக தேமுதிக விசிக மதிமுக தெலுங்கர்களுக்கு என்ன கவலை... அவனுவோ கவலை எல்லாம் தமிழனை எப்படி ஏமாற்றி ஆளலாம் சுரண்டலாம் கொள்ளை அடிக்கலாம் என்பது தானே...
அவருக்கு அறிவாலயத்தில் காவல் செய்யவே நேரம் சரியா இருக்கு! பட்டியலின விவசாயி சாவுக்கு போராடவெல்லாம் எங்கே நேரம் இருக்கப் போகிறது?
பேசாம திருமா அதிமுக வோடு கூட்டு வெச்சிரலாம். அப்போ இதுமாதிரி கேள்வி கேக்கமாட்டாரு
பட்டியலினம் வேறு அவர் இனம் வேறு, பட்டியலினத்தவர் பார்ப்னர் அதனால் குரல் கொடுக்கவில்லை
சமயம் பார்த்து இப்படி தாக்கினால் எப்படிங்க பழனிச்சாமி அவர்களே. அவரே அழாத குறையாக சோகத்தில் இருக்கின்றார். திமுகவின் நம்ம்ம்ம்பி ஏமாந்துபோய் இருக்கின்றார். திமுகவுக்கு எவ்வளவு ஊதுகுழல் போல இருக்க முடியுமோ அவ்வளவு தூரம் தாக்குப்பிடித்து ஒத்தூதினார். வேங்கை வயல் விஷயத்தில் திமுக உத்தரவுப்படி சொந்த சாதிசனம் பாதிக்கப்பட்டிருந்தபோதும் கூட நேரில் போகவில்லையே. இப்போ மட்டும் எப்படி அவர் வாய் திறக்க முடியும். திமுக ஏற்கனவே விசிக்கவை பிளவுபடுத்தி காத்திருக்கின்றது. திருமாவின் செல்வாக்கை அடியோடு அழிக்க முடிவெடுத்துவிட்டார்கள். இது தெரிந்த திருமா நொந்துபோய் இருக்கின்றார். பாவம் மனுஷன் இன்னும் வெள்ளந்தியாகவே திமுகவை நம்பிக்கொண்டு இருக்கின்றார். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல நீங்களும் பேசினால் எப்படிங்கமேலும்
-
பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு; ஆதவ் அர்ஜூனா மனு நிறுத்தி வைப்பு
-
தமிழகம் தான் டபுள் டிஜிட் வளர்ச்சி; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
திருநெல்வேலியில் நாளை விஜய் பொதுக்கூட்டம்: 51 நிபந்தனை விதித்த போலீசார்
-
அதிகார மமதையில் மக்களுக்கு நிகழும் கொடுமைகள்: கமல் காட்டம்
-
இனி ஆந்திர தலைநகர் அமராவதி: அதிகாரப்பூர்வமாக அரசிதழ் வெளியீடு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு