இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி... ஒரு மணிநேரத்தில் ரூ.14 லட்சம் கோடி இழப்பு
மும்பை: இந்திய பங்குச்சந்தைகளான சென்செக்ஸ், நிப்டி கடும் சரிவை சந்தித்ததால், வர்த்தகம் துவங்கிய ஒரு மணிநேரத்தில், முதலீட்டாளர்களுக்கு ரூ.14 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் சுமார் 1,900 புள்ளிகள் சரிந்து 72,628 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தையான நிப்டி 600 புள்ளிகள் சரிந்து 22,504 புள்ளிகளாகவும் வீழ்ச்சியை சந்தித்தன. இதனால், பங்குச் சந்தை துவங்கிய ஒரே மணிநேரத்தில் முதலீட்டாளர்களுக்கு ரூ.14 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, பிஎஸ்இ பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு ரூ.429 லட்சம் கோடியிலிருந்து ரூ.415 லட்சம் கோடியாகக் குறைந்தது.
மார்ச் மாதத்தில் மட்டும் இதுவரை சுமார் 90,152 கோடி மதிப்பிலான பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்று விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியை சந்திக்க சில காரணங்களை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். அதாவது, அமெரிக்கா - ஈரான் போர் தீவிரம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, முதலீட்டாளர்களிடையே அதிகரித்த பயம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேற்றம், உலகளாவிய சந்தை பாதிப்பு உள்ளிட்டவை சென்செக்ஸ் மற்றும் நிப்டியின் சரிவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இன்னும் 48 மணி நேரம் தான், பிறகு மைனஸ் புள்ளிகள், அதற்கு போங்கடா நீங்களும் உங்க சென்செக்ஸ் புள்ளியும், 2 குரங்குகள் எங்கேயோ சண்டை போட்டால் இந்தியாவின் அத்தனை வளர்ச்சியும் போயிடுச்சா, என்னடா லாஜிக் இது
விரவில் கோவிட் காலம் மாதிரி நாலு வங்கிகளுக்கு 20 லட்சம் கோடி சுண்டல் விநியோகிக்கப்படும்.
ஏல அப்பாவி..கடைசி வரை உழைத்து சாப்பிடனும்னு உனக்கு எண்ணம் இல்லை..எல்லாமே ஓசியில் வேணும்
பங்குச்சந்தை என்பது ஏற்றம் / வீழ்ச்சி என்றுதான் இருக்கும். ஒரே மாதிரியாக ராக்கெட் போல மேலே சென்றால் உலகமே அதிலேதான் முதலீடு செய்யும். இளகிய மனம் படைத்த உடன்பிறப்புகள் அதன் பக்கம் செல்லாமல் இருப்பதே நல்லது.
இரு நாடுகளுக்கு இடையேயான போர், உலகம் முழுவதிலும் பேரழிவை ஏற்படுத்துகிறது, மோதல் பகுதிக்கு அப்பாலும் கடுமையான சேதங்களை விளைவிக்கிறது. இரண்டு உலகப் போர்களின் பேரழிவுகளிலிருந்து கூட, கொடூரமான மனித இனம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. மனிதனின் அறிவுத்திறன், கற்கால குகை மனிதர்களின் காலத்திலிருந்து இன்னும் முதிர்ச்சியடையவில்லை என்றே நான் கருதுகிறேன்.
All due to trump and satanyahu, one day both will face justice
கவலை வாணாம். பீதி வாணாம். பாகிஸ்தானை விட நாம பெட்டர்.
This is nothing. Thalaivar will do all out efforts with the help of Israel , to see that Muslims are killed enmass and thus market will skyrocket to new height. Kudos to Thalaivar Trump.
ஒரே பேத்தல், அதுல இங்கிலிஷ் வேற
இதெல்லாம் ஜீக்கு ஜுஜுபி மேட்டர். எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை. ஒரு போன் கால் போட்டு போரை நிப்பாட்டுவார். இன்னொரு போன்கால் போட்டு பங்குச்சந்தையை நிமிர்த்தி விடுவார்.
benaras ஒரு அதிகப்ரசஙி என்று எல்லார்க்கும் தெரியுமே
விசுவகுருவின் சாதனைன்னு சொல்லலாமா?
உக்ரைன் போரிலிருந்து தமிழர்களை காப்பாற்ற பேருந்தை அனுப்பிய திராவிட மாடலின் சாதனை என சொல்லுங்கமேலும்
-
குண்டுவெடிப்பு கைதிக்கு காவல் நீட்டிப்பு
-
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது
-
ஓட்டு சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
-
செயற்கையாக பழுக்க வைத்து பழங்கள் விற்பனை: புகாரளிக்க பொதுமக்களுக்கு அழைப்பு
-
ஏற்றுமதி வரிச்சலுகை நீட்டிப்பு தொழில்துறையினர் வரவேற்பு
-
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் திமுக, அதிமுக, நாதக இடையே மோதல்; சேர்களை வீசி அடிதடி