கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

பேரூர்: பேரூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், எஸ்.ஐ., வினோத் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ராமசெட்டிபாளையம் பகுதியில் செல்லும் போது, வீட்டின் முன் நின்று கொண்டிருந்த மூன்று வாலிபர்கள், போலீசாரை கண்டதும் ஓடினர்.

சந்தேகமடைந்த போலீசார், அவர்களை துரத்தி பிடித்து சோதனை செய்தனர். விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் செல்வபுரம் சரவணன், 24, சுண்டக்காமுத்தூர் விக்னேஷ், 22, ஹரி ராகவேந்திரன், 22 என்பது தெரிந்தது. பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, மூவரையும் கைது செய்தனர். 2.4 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement