குண்டுவெடிப்பு கைதிக்கு காவல் நீட்டிப்பு

கோவை: கோவையில் 1998 பிப்.,14ல், பல்வேறு இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர் டெய்லர் ராஜா, 51. 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார்.

கர்நாடக மாநிலம், விஜயபுரா பகுதியில் தலைமறைவாக இருந்தவரை கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி, தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்தபடி, காணொலி வாயிலாக நேற்று ஜே.எம்:5 கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து காவல் நீட்டிக்கப்பட்டது.

Advertisement