மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

பரங்கிப்பேட்டை: புவனகிரியில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு நடந்த பயிற்சி முகாமை, மாவட்ட தேர்தல் அலுவலர்

ஆய்வு செய்தார்.

புவனகிரி சட்டசபை தொகுதியில் தேர்தலின் போது, ஓட்டுச்சாவடி மையங்களில் பணி புரியும் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் அலுவலர்களுக்கு புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்பயிற்சி முகாம் நடந்தது.

முகாமில், ஓட்டுச்சாவடி அமைத்தல், ஓட்டுப்போடும் மிஷினை எப்படி கையாள்வது, ஓட்டுப்போட எத்தனை மணிக்கு அனுமதிப்பது, எத்தனை மணிக்கு முடிப்பது உள்ளிட்ட விவரங்கள் விளக்கி கூறப்பட்டன.

பயிற்சி முகாமை, மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். அவருடன், புவனகிரி தொகுதி கண்காணிப்பாளர் ஜெகதீஸ்வரன், தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கமணி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தமிழ்ச்செல்வன், ராமதாஸ் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

Advertisement