சிறுமியிடம் ஆபாச சைகை: 'காமுக' நபருக்கு தர்ம அடி
சென்னை: சிறுமியிடம் ஆபாச சைகை காட்டிய நபருக்கு, சிறுமியின் உறவினர்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த 4 வயது சிறுமி, நேற்று முன்தினம் தன் பாட்டி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அந்த இடத்தில் நின்ற மர்ம நபர் ஒருவர், தன் ஆடையை துாக்கி சிறுமியிடம் ஆபாசமாக சைகை காட்டி உள்ளார்.
இது குறித்து சிறுமி தன் பாட்டியிடம் தெரிவிக்க, அங்கு இருந்தோர் அந்த நபரை பிடித்து, தர்ம அடி கொடுத்து சிந்தாதிரிப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்தனர். இதில், சிந்தாதிரிப்பேட்டையில் நடைபாதையில் வசிக்கும் பாபு, 55 என்பது தெரியவந்தது. போலீசார் அவரை நேற்று கைது செய்தனர்.
பெண்களிடம்
ஆபாச சைகை
காட்டியவர்
கைது
சென்னை, மார்ச் 30-
பெண்களிடம் தவறான சைகை காட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருவல்லிக்கேணியைச் சேர்ந்த, 21 வயது கல்லுாரி மாணவி, சகோதரி மற்றும் பாட்டியுடன் சென்னையில் வசித்து வருகிறார். இவரது பெற்றோர், துபாயில் வசித்து வருகின்றனர்.
இவர் நேற்று முன்தினம், காலை தன் சகோதரியுடன், திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு மது போதையில் இருந்த நபர், இவர்களிடம் ஆபாச சைகை காட்டியுள்ளார்.
இதுகுறித்து, மாணவி அளித்த புகாரை அடுத்து, திருவல்லிக்கேணி போலீசார் விசாரித்து, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சையது சாதிக் பாஷா, 39, என்பவரை, நேற்று கைது செய்தனர்.
மேலும்
-
வெளிநாட்டு 'டூர்' ஆசை காட்டிய முஸ்லிம் லீக் நிர்வாகி மீது வழக்கு
-
பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் மீன் சாப்பிட முடியாது: முதல்வர் மம்தா விமர்சனம்
-
தானே மாநகராட்சியில் ரூ.4,500 கோடி மோசடி: கவுன்சிலர்கள் கொந்தளிப்பு
-
38,000 டன் எரிபொருள் வழங்கிய இந்தியாவுக்கு நன்றி: இலங்கை
-
மூன்றாவது முறையாக பா.ஜ., ஆட்சி தேசிய தலைவர் நிதின் நபின் நம்பிக்கை
-
3வது துணை வாக்காளர் பட்டியல் மேற்கு வங்கத்தில் வௌியீடு