தே.ஜ., கூட்டணியில் பா.ஜ., பா.ம.க., அ.ம.மு.க., 27+18+11 ஒதுக்கீடு!
சென்னை: தே.ஜ., கூட்டணியில், பா.ஜ.,வுக்கு 27, பா.ம.க.,வுக்கு 18, அ.ம.மு.க.,வுக்கு 11 தொகுதிகளை அ.தி.மு.க., ஒதுக்கியுள்ளது. த.மா.கா., உள்ளிட்ட மற்ற கட்சிகளுடன், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறார்.
தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் பா.ஜ., - பா.ம.க., - அ.ம.மு.க., - த.மா.கா., உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்நிலையில், தொகுதி பங்கீடு குறித்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு கட்டங்களாக பேச்சு நடத்தினார்.
அதன்படி, கடந்த 19ம் தேதி டில்லி சென்ற பழனிசாமி, அமித் ஷாவை சந்தித்து பேச்சு நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளருமான பீயூஷ் கோயல் நேற்று சென்னை வந்தார்.
யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்
அதன்படி, தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு நேற்று மதியம் 2:30 மணிக்கு பீயூஷ் கோயல் வந்தார். அவருடன், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மூத்த தலைவர் தமிழிசை ஆகியோர் வந்தனர்.
தொடர்ந்து, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், பா.ம.க., தலைவர் அன்புமணி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், ஐ.ஜே.கே., நிறுவன தலைவர் பாரிவேந்தர் ஆகியோரும் வந்தனர். இதையடுத்து, யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பதை பழனிசாமி அறிவித்தார்.
எந்த கட்சிக்கு எந்த தொகுதி
பழனிசாமி அளித்த பேட்டி: எங்கள் கூட்டணியில் தொகுதி பங்கீடு சுமுகமாக நடந்தது. அதன்படி, பா.ஜ.,வுக்கு 27 தொகுதி களும், பா.ம.க.,வுக்கு 18, அ.ம.மு.க.,வுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்னும் சில கட்சிகளுடன் பேச்சு நடக்கிறது. இரவுக்குள் பேச்சு முடிந்து, அந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை அறிவிப்போம்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், அவர்களது கூட்டணி கட்சி தலைவர்களும், எங்கள் கூட்டணியை பற்றி விமர்சனம் செய்கின்றனர். தே.ஜ., கூட்டணி உணர்வுப்பூர்வமான வெற்றி கூட்டணி. வரும் தேர்தலில், 210 இடங்களில் இந்த கூட்டணி வெற்றி பெறும்; அதிக இடங்களில் வென்று, அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும்.
எங்களுடைய கருத்து பரிமாற்றத்துக்காக டில்லி செல்கிறோம். நாங்கள் டில்லிக்கு சென்றால், ஸ்டாலினுக்கு பயம் வந்து விடுகிறது; அவதுாறு பரப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இன்று நாங்கள் அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் ஒன்று கூடி உள்ளோம். காலையில் தான் பீயூஷ் கோயல் வந்தார். அவருடன் பேச்சு நடத்தி, மதியம் அறிவித்துள்ளோம்.
எந்த கட்சிக்கு எந்த தொகுதி என்பதை விரைவில் அறிவிப்போம். ஆனால், 20 நாட்களாக தி.மு.க., கூட்டணியில் இழுபறி நீடிக்கிறது. மக்கள் விரோத தி.மு.க.,வை அகற்ற வேண்டும் என்பதற்காக ஒன்று சேர்ந்துள்ளோம். தினகரன் இன்று அ.தி.மு.க., அலுவலகம் வந்துள்ளார்; எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை.
எமர்ஜென்சி, மிசா கொண்டு வந்த காங்கிரசோடு தி.மு.க., கூட்டணி அமைத்துள்ளது. வி.சி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இன்னும் இழுபறி நீடிக்கிறது. அது தான் பொருந்தாத கூட்டணி. நாங்கள் தொகுதி பங்கீட்டை அறிவித்து விட்டோம். ஆனால், தி.மு.க.,வால் முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தற்போது தொகுதி பங்கீட்டில் 56 தொகுதிகள் போக, அ.தி.மு.க., கையில் 178 தொகுதிகள் உள்ளன. இவற்றில், வாசன், ஜான் பாண்டியன், பாரிவேந்தர், ஜெகன் மூர்த்தி, ஏ.சி.சண்முகம் ஆகியோருக்கான தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து, பழனிசாமி தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறார்.
@block_B@
மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல், அ.தி.மு.க., அலுவலகத்திற்கு வந்த பின், ஜெயலலிதா போல பால்கனியில் நின்று, கைகளை அசைத்து விட்டு உள்ளே சென்றார். அதேபோல், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட பின், ஒன்பது ஆண்டுகளுக்கு பின் நேற்று தினகரன் அ.தி.மு.க, அலுவலகத்துக்கு வந்தார். அவரும் பால்கனியின் நின்றபடி, கீழே நின்ற கூட்டணி கட்சிகளின் தொண்டர்களுக்கு வணக்கம் வைத்தார்.block_B
@block_G@
தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய, ஜான் பாண்டியன், பாரிவேந்தர் ஆகியோர் அ.தி.மு.க., அலுவலகம் வந்திருந்தனர். ஆனால், அவர்களுக்கான தொகுதி விபரங்களை பழனிசாமி வெளியிடவில்லை. இதனால், இருவரும் ஏமாற்றம் அடைந்தனர். அதேபோல், தொகுதி பங்கீட்டு பேச்சுக்கு, த.மா.கா., தலைவர் வாசனுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் கேட்கும் ஆறு தொகுதிகளை கொடுக்க, பழனிசாமி சம்மதம் சொல்லவில்லை. இதனால், அ.தி.மு.க., அலுவலகத்துக்கு வாசன் வரவில்லை.block_G
@block_Y@ அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கூறியதாவது: அ.ம.மு.க.,வுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 99 சதவீதம், நான் கேட்ட தொகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளன. என்னென்ன தொகுதிகள் என்பதை பழனிசாமி சொல்வதே சரியாக இருக்கும். எனக்கு ஆதரவாக நின்ற முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பலருக்கு, இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. 11 தொகுதிகளிலும் 'குக்கர்' சின்னத்திலேயே போட்டியிடுவோம். தமிழகத்தில் மற்ற கட்சிகளின் கூட்டணியால், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.block_Y
@block_P@
பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பீயூஷ் கோயல் நேற்று காலை சென்னை வந்தார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பீயூஷ் கோயலை, வாசன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், ஜான் பாண்டியன் ஆகியோர் சந்தித்தனர். அவர்களிடம், 'உங்கள் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்களில், பா.ஜ.,வின் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும்' என பீயூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர்கள் தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து, ஓரிரு தினங்களில் முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர். பின், வாசன் கூறுகையில், ''த.மா.கா., விருப்பத்திற்கு ஏற்ப, தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து பீயூஷ் கோயலிடம் பேசியுள்ளேன்,'' என்றார் . ஏ.சி.சண்முகம் கூறுகையில், ''மூன்று இடங்களாவது வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்; ஆலோசித்து சொல்வதாக தெரிவித்துள்ளனர். இந்த தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட, புதிய நீதி கட்சி தயாராக உள்ளது,'' என்றார். பாரிவேந்தர் கூறும்போது, ''நாங்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்க சம்மதித்தனர். எங்களின் சின்னம் மைக்; அந்த சின்னத்தில் போட்டியிடுவோம்,'' என்றார்.block_P
@block_B@
பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியதாவது: தி.மு.க.,வின் பேச்சை, மக்கள் இனி நம்ப மாட்டார்கள். எனவே, தே.ஜ., கூட்டணி, 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். தொகுதி பங்கீடு எங்களுக்கு நிறைவாக இருந்தது. மக்களை சந்திக்க பயப்படும் முதல்வர் ஸ்டாலினும், அவரது கூட்டணி கட்சியினரும், 'டில்லி டில்லி' என கத்துகின்றனர். சாதனைகளை சொல்லி தேர்தலை சந்திக்க தைரியமில்லாத தி.மு.க., 28 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.block_B
உபிக்கள் மட்டும் கதறி மாற்று கருத்து போடுவார்கள். பிஜெபியிடம் கட்சியை அடகு வைப்பார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு இடி. பிஜெபி அஇஅதிமுக கூட்டணி நல்ல நட்பான உறுதியான சந்தோசமான கூட்டணி என்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது.தனிப்பட்ட முறையில் எனக்கிருந்த தவறான சிந்தனையும் நீங்கியுள்ளது.பண்ணீரை புரிந்து கொள்ளும் நேரமிது.எடப்பாடியாருக்கு நன்றி.
இந்த நேரத்தில் தமிழக மக்களும் பனி அக்காவின் பாஸ்மாக் இல் இருந்து வெளியே வந்து வோட்டு போட்டார்கள் என்றால் சர்வாதிகாரம் புதைக்கப்படும் அவர்களின் வாரிசு ஆட்சியையும் அகற்ற படும் விதவைகளை அதிகரிக்கும் பாஸ்மாக் ஒழிக
இந்த போட்டோவை பார்த்தாலே திமுகவுக்கு வயிறு கலங்கும். பீதி குமையும்.. நம்பிக்கை குலையும்....
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27 ஒரே நாளில் முடிந்த டீலிங்
திமுக கூட்டணியில் மிரட்டி பணிய வைக்கிறார்கள். விசிகவும் கம்யூனிஸ்ட் ம் தடுமாறுகிறார்கள. கடைசி நேரத்தில் போக்கிடம் இல்லை. இதை திமுக பயன்படுத்தி கோள்கிறது. இதுதான் கோள்கை கூட்டணி.
நோட்டா கட்சி என்று கேலி செய்தவர்கள் மத்தியல் இவ்வளவு தொகுதிகள் கிடைத்தது கண்டு பொறாமையில் புழுங்குகின்றார்கள். சொல்லப்போனால் 39 தொகுதிகளை அதிமுக பாஜகவுக்கு ஒதுக்கி உள்ளது. அதில் தினகரனுக்கு 11 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. விலகி நின்ற தினகரன் அவர்களை சமாதானம் செய்து அண்ணாமலை கூட்டணிக்குள் கொண்டுவந்துள்ளார். அதனால் 11 தொகுதிகளை ஒதுக்க பாஜக சம்மதித்துள்ளது. அதனால் ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால் 39 தொகுதிகள் பாஜகவுக்கு.
நேற்று முதல் உ.பிக்களுக்கு கதறல் ரொம்ப ஜாஸ்தியாவே இருக்கு.புதிதாக அரியணையில் ஏறப் போகும் எடப்பாடி யைப் பார்த்து இன்னும் ஐந்து வருடம் கழித்து உங்கள் சந்தோசத்திற்காக நாடகம் விடும் நேரம்தான் என நீங்கள் தாராளமாக பாடிக் கொள்ளலாம். இப்பதைக்கு நாடகம் விடும் நேரம் ஐந்து வருடங்களாக நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கும் பொம்மை முதல்வர், பொம்மலாட்ட முதல்வர் ஸ்டாலினுக்குதான் அது பொருந்தும்.மற்ற படி உங்களைப் போல அதுல ஏறப் போகும் என்றெல்லாம் நான் தரம் தாழ்த்து கருத்துப் பதிவு ஏதும் செய்ய மாட்டேன்.
உனக்கு 27, எனக்கு 28. ஹையா..
அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு சுமுகமாக முடிந்தாலும் இது வெற்றிக்கான தொகுதி பங்கீடு என்பதை விட தலைவர்கள் தங்கள் தலைமையை நிலை நிறுத்திக் கொள்ள அமைக்கப்பட்ட பங்கீடு போல தான் தோன்றுகிறது எதனால் என்றால் புதிய கட்சிகள் எதுவும் இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க,, தினகரன், அன்புமணி கட்சிகளுக்கு இரட்டை இலக்க எண்ணிக்கையில்- நியாயமான முறையில்- தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல தொடக்கம். மற்ற சிறிய கட்சிகள் பா.ஜ.க. சின்னத்தில் தான் போட்டியிடும் என்பதால் பா.ஜ.க.வின் எண்ணிக்கை கூட வாய்ப்புள்ளது.மேலும்
-
ஓடும் லாரியில் இருந்து தப்பிய நாய்க்கூட்டம்; 17 கி.மீ., தூரம் பயணித்து வீடு திரும்பிய புத்திசாலித்தனம்!
-
புதுச்சேரியில் தனித்துப்போட்டி; கூட்டணியால் தேவையற்ற மன உளைச்சல் என்கிறார் திருமா
-
தொகுதி பங்கீட்டில் தமாகாவுக்கு அதிருப்தியா? பரவிய வதந்திக்கு ஜிகே வாசன் முற்றுப்புள்ளி
-
திமுக- விசிக தொகுதி பங்கீடு முதல் அதிமுக மா.செ கூட்டம் வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 24)!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,720 சரிவு
-
போரின் தாக்கங்களில் இருந்து மக்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன? கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்