'தமிழக அரசியலுக்கு கனிமொழி வர வேண்டும்'

2

தி. மு.க. வின் கனிமொழி தமிழக அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை, அக்கட்சியினர் இடையே வலுத்துள்ளது. கோவை மக்கள் தங்கள் மனதில் கனிமொழிக்கு என்ன இடம் கொடுத்துள்ளனர், விருப்பம் என்ன என்பது பற்றி அவர்களின் கருத்து இதோ!

'ஜெ. மாதிரி முடிவு எடுங்கள்' க



னிமொழி கட்டாயம் தமிழக அரசியலுக்கு வரவேண்டும். இந்த முடிவை அவர் உடனடியாக எடுக்க வேண்டும். தற்போது வரவில்லை என்றால் இனி எப்போதுமே வரமுடியாது. அதற்கு சரியான உதாரணம் ஜெயலலிதா. அதுதான் அவரை மாபெரும் தலைவராக மாற்றியது.

- மேகலதா டி.வி.எஸ்.நகர்

'காலத்தின் கட்டாயம்'



கருணாநிதியின் மகள் என்ற அங்கீகாரம் இருந்தாலும், கனிமொழி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்தால் தான் அவரது ஆளுமை என்ன என்பது மக்களுக்கு தெரியும். இன்றைய அரசியலில் அவர் வேகமாக செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

- சசிகலா ராமச்சந்திரன் என்.எஸ்.என்.பாளையம்

'மாநிலத்துக்கு நல்லது'



மாநிலத்தின் பிரதிநிதியாக டில்லியில் சிறப்பாக கனிமொழி செயல்படுகிறார். அனுபவம் வாய்ந்தவர். எந்த பொறுப்பு என்றாலும் அவர் திறமையாக கையாள்வார். இப்போதைக்கு மத்தியில் பெரிய பணிகள் இல்லை என்பதால், மாநில அளவில் அவர் முக்கிய பொறுப்புக்கு வருவது தவறில்லை.

-சூர்யா சிங்காநல்லுார்.

'அங்கேயே இருக்கட்டும்'



இப்பத்தானே எம்.பி.,யா ஜெயிச்சாங்க. அதுக்குள்ள ஏன் மாத்தணும். டெல்லியிலும் கட்சிக்கு நல்ல முகம் வேண்டும்தானே. மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்தால் அப்போது ஒருவர் வேண்டுமல்லவா. மத்திய அமைச்சரானால் நல்லது.

-ஜெ.வி.தர்ஷினி டி.வி.எஸ். நகர்

'அவர் தான் முடிவெடுக்கணும்'



மாநில அரசியலில் இருப்பதா, தேசிய அரசியலில் பங்களிப்பதா என கனிமொழி தான் முடிவெடுக்க வேண்டும். இது அந்த கட்சியின் முடிவு. மக்கள் சொல்வதற்கு ஒன்றுமில்லை. பெண் என்பதால் அவரை முன்னிறுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை. விருப்பம் இருந்தால் வரட்டும்.

- டி.ஷாலினி கோவில்பாளையம்

'தி.மு.க.வுக்கு கூடுதல் பலமே'



கனிமொழி தமிழக அரசியலுக்கு நிச்சயம் வரவேண்டும். கனிமொழி வந்தால் துணைமுதல்வர் உதயநிதியின் அரசியலுக்கு பிரச்னை வரும் என்பதெல்லாம் அபத்தம். கனிமொழி வருவது தி.மு.க.வுக்கு கூடுதல் பலத்தையே தரும். ஒரு அதிகாரமிக்க பெண் தலைமை தி.மு.க.வில் இருப்பது கட்சியின் மீதான பெண்கள், இளைஞர்கள் பார்வையையும் மாற்றும்.

-- அரவிந்த் போத்தனுார்.

Advertisement