பார்லியில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்; நாளை மாலை 4 மணிக்கு ஓட்டெடுப்பு
புதுடில்லி: பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் இன்று (ஏப்ரல் 16) காலை 11 மணிக்கு தொடங்கியது. லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். 12 மணி நேரம் விவாதம் நடக்கும்; நாளை மாலை 4 மணிக்கு ஓட்டெடுப்பு நடக்கும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
மசோதா தாக்கல்
இந்த மசோதாவை லோக்சபாவில் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி எம்பி வேணுகோபால் வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது. எம்பிக்களின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
உள் இடஒதுக்கீடு
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் முஸ்லீம் பெண்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என சமாஜ்வாதி எம்பி அகிலேஷ் யாதவ் வலியுறுத்தினார். பெண்களை மத ரீதியாக பிரித்து பார்க்க வேண்டாம் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார். மத ரீதியாக இட ஒதுக்கீடு தர அரசியலமைப்பு சட்டத்தில் இடமில்லை என அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்த சிறப்பு கூட்டத்தொடர் வரும் ஏப்ரல் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கிடையே மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுடன் இணைக்கப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு 'இண்டி' கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பார்லிமென்ட் வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
நாளை ஓட்டெடுப்பு
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்கள் மீதும் 12 மணி நேரம் விவாதம் நடக்கும். நாளை மாலை 4 மணிக்கு ஓட்டெடுப்பு நடக்கும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடர் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் நடந்து வருகிறது. தினமலர் யூடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
நேரலை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பார்லியமென்டில் தாக்கல் ....நாளை வாக்கெடுப்பு .....இதை கேட்டு விடியல் தமிழுக்காக அப்படியே தொங்கிடுவாரு .....
If the opposition are really interested in discussion, they should put forth their objections, if any, and find a solution by way of fruitful discussions. If they ruckus, as usual, that means that they are not working in the interest of general public. They are only interested in just propagating falsehoods, misleading general public, instil unnecessary fear in their mind and get temporary gain out of it. Parliament is meant for discussions and arriving at a conclusion by way of votes by elected representatives. General publics money should not be wasted by creating ruckus.
மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் 2023 ஆண்டே கொண்டுவரப்பட்டது, நிறைய திருத்தங்கள் தெரிவிக்கப்பட்டதா ல் , அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு, இப்போது தொகுதி மாரு வரையறை என்ற பெயரில் மறுபடி வேறு எதோ தில்லுமுல்லு செய்யப்படுகிறது, ஏன் இவ்வளவு நாள் தூக்கம்?, இப்போது ஏன் இந்த அவசரம் ? விவாதம் செய்ய நேரம் கொடுக்கவில்லை, கிரண் ரிஜூஜூவுக்கு எப்படி சட்டம் கொண்டுவரனும் என்று தெரியாதா ? தேர்தல் நடத்தும் பொது அனைத்து எம். பி. க்களும் வேலையாக இருக்கும்போது திடீரென்று என்னையா பார்லி. சிறப்பு கூட்டத்தொடர் ? வழக்கம் போல எந்த சட்டமும் பின்வாசல் வழியாக நிறைவேற்றப்படும், அதைத்தான் இப்போதும் பொய் பி அரசு செய்கிறதா ? இனி அதை ஏற்க இயலாது பாராளுமன்றம் முடக்கப்படும்.
தசரதர் சாமி ஸ்டாலின் தான் தற்குறி மாதிரி பிதற்றிக்கொண்டிருக்கிறார் என்றால் நீங்களுமா? அந்த மசோதாவில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரியாமலேயே ஸ்டாலின் உளறுகிறார். மோதிக்கு எச்சரிக்கை விடுக்கிறார். தமிழகத்தின் மானத்தை வாங்குகிறார். 1. எல்லா மாநிலங்கின் தொகுதிகளின் எண்ணிக்கை 50% உயர்த்தப்படும். ஆகவே உபி , பிஹாருக்கெல்லாம் எவ்வளவு சதவீதம் உயர்த்தப்படுகிறதோ அவ்வளவு தமிழகத்துக்கும் கிட்டும். 2. மகளிருக்கு 33% ஒதுக்கப்படும். 3. ஆகவே தொகுதிகள் மறுவரை செய்யப்படவேண்டும். . இது ஸ்டாலினுக்குத்தான் புரியவில்லையென்றால் தசரதனுக்குமா ? ஆக ஸ்டாலின் தேவையில்லாமல் கலவரத்தை த்தூண்டுகிறார் இந்தத்தேர்தல் நேரத்தில்.
மகளிருக்கு ஒதுக்கீடு சரி.
ஆனால் உறுப்பினர் எண்ணிக்கை உயர்த்துவது தவறு. தேவையே இல்லாத ஒன்று.
தேவையா இல்லையா என்று பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் விவாதித்து முடிவெடுப்பார்கள் நீங்க பேப்பர் படிச்சு தெரிஞ்சுக்கோங்க
While BJP governments are excited about the Womens Reservation Bill, it seems that Congress might betray the women of the country by opposing the bill in Parliament.
மகளிருக்கான இட ஒதுக்கீட்டை இப்பொழுதுள்ள எண்ணிக்கையில் சரி பாதி உயர்த்துவதற்குப்பதிலாக தற்சமயம் உள்ள எண்ணிக்கையில் 33 சதவிகதம் ஒதுக்கலாமே. எண்ணிக்கையை உயர்த்தி அவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்வது அவர்களை குறைத்து மதிப்பீடு செய்வதாக உள்ளது. மேலும் தேவையில்லாமல் நிர்வாக செலவை அதிகப்படுத்தும். எனவே தற்சமயம் உள்ள எண்ணிக்கையில் 33சதவிகிதம் மகளிருக்கு அளிப்பது நல்லது
நன்று. இதுவே சரியானதும் கூட.
மகளிர் இட ஒதுக்கீடு நல்லதா? ஆம்பளைங்களுக்கு ஆப்பு வைப்பாங்க பாரு அப்ப தெரியும் ....
பாராளுமன்ற கேன்டீனில் தள்ளு முள்ளு உறுதி
இதில் எந்த இடத்திலும் எந்த மாநிலத்தின் இடங்களும் குறைக்கப்படும் எனக் கூறப்படவில்லை. ஆக திமுக போராட்டம் மக்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை மறக்கடிக்கவே நடத்தப்படுகிறது என்பது தெளிவாகிறது.
50 சதவீதம் கொடுக்க வேண்டும்மேலும்
-
ரூ.60 லட்சம் நிலமோசடி : உறவினர்கள் இருவர் கைது
-
மக்களுடன் நிற்கும் ஒரே கட்சி அ.தி.மு.க., மட்டுமே: தி.நகர் சத்யா
-
தலையில் விழுந்த குடம்: நனைந்த தி.மு.க., நிர்வாகிகள்
-
வார்டு தோறும் மருத்துவ கிளினிக் இலவசமாக நடத்தப்படும்: தமிழிசை
-
குழந்தைகள் பாதுகாப்பாக விளையாடும் சூழலை ஏற்படுத்தி தருவேன்: கார்த்திக் மோகன் உறுதி
-
வாரத்தின் ஏழு நாட்களும் எம்.எல்.ஏ., ஆபீஸ் இயங்கும் :அ.தி.மு.க.,- கந்தன் உத்தரவாதம்