முதல்வர் ஸ்டாலின் மீது ஒரே ஒரு குற்றச்சாட்டு: பிரேமலதா பேச்சால் திமுகவினர் அதிர்ச்சி
சேலம்: தமிழ்நாடு முழுக்க ஒரே குற்றச்சாட்டு தான் அண்ணன் மேல இருக்கு, எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை; போதை கலாசாரம் என திமுக பிரசார கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரமேலதா வெளிப்படையாக பேசியதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
சேலம் திமுக பிரசார பொதுக்கூட்டத்தில் பிரேமலதா பேசியதாவது: தமிழ்நாடு முழுக்க ஒரே குற்றச்சாட்டு தான் அண்ணன் மேல இருக்கு. அதுவும் இந்த பெண்கள் கூட்டத்தில் நான் சொல்கிறேன். எங்கே பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை; போதை கலாசாரம் இருக்கு. இதைத்தவிர வேறு என்ன சொல்ல முடியும்? இந்த ஆட்சியின் மீது வேறு ஒன்றும் சொல்ல முடியாது. நான் சொல்கிறேன், இன்றைக்கு சகோதரியாக இந்த கூட்டணியில் அண்ணனுக்கு வலது கரமாக இணைந்து இருக்கிறேன்.
ஜான்சி ராணியாக….!
அப்படி எங்கேயாவது பெண்களுக்கு ஏதாவது என்றால் அண்ணனிடம் உரிமையாக பேசுவேன். எல்லா இடங்களிலும் சிசிடிவி, பெண்களுக்கான உரிமையும் பாதுகாக்கும் சூழலை நிச்சயம் அண்ணன் உருவாக்குவார் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் தேவையில்லை. பெண்கள் என்றாலே சக்திக்கு இணையானவர்கள்.
ஓட்டுமொத்த சக்திகளே இன்றைக்கு ஒன்று இணைந்து இருக்கிறோம். நாம் அனைவரும் இணைந்து சக்திகளாக நமது தமிழகத்தையும், திராவிட பாரம்பரியத்தையும் காக்க வேண்டிய தருணம். தமிழகத்திற்கு எதாவது சின்ன பிரச்னை ஏற்பட்டால் நாம் எல்லோரும் ஜான்சி ராணியாக மாறுவோம்.
@twitter@https://x.com/dinamalarweb/status/2044656094262546591?s=20twitter
வீட்டில் துர்கா!
வேலு நாச்சியாராக மாறுவோம். தமிழத்திற்கு அச்சுறுத்தல் வந்தால் ஒட்டுமொத்த பெண்கள் சக்தியும் ஒன்று திரண்டு அண்ணனுக்கும், இந்த ஆட்சிக்கும் துணை நிற்போம். பெண் சக்தி ஒன்று திரண்டால் இந்த உலகமே நினைத்தாலும் அவரை எதிர்க்க யாரும் முடியாது. வீட்டில் அவரை பாதுகாப்பதற்கு அண்ணி துர்கா இருக்கிறார்.
தமிழகம் முழுவதும் துர்காக்களாக, அம்மன்களாக, சக்திகளாக தாய் குலங்கள் நீங்கள் இருக்கிறீர்கள். அதனால் சொல்கிறேன். அவருக்கு எதுவும் வராது. அவரது ஆட்சிக்கும் எதுவும் வராது. நிச்சயம் சொல்கிறேன். இந்த ஆட்சி மீண்டும் மகத்தான வெற்றி பெறும். இவ்வாறு பிரேமலதா பேசினார்.
கூட்டணிக் கட்சிகளின் கூட்டுப் பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கூடியிருந்த கூட்டத்தில் இவ்வாறு பிரேமலதா பேசியது, திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்தது. பிரேமலதா வாய் தவறி பேசினார் என்றும், வேண்டுமென்றே பேசினார் என்றும், அரசியல் கட்சியினர் இணையத்தில் கேலி, கிண்டலாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழகத்திற்கு ஏதாவது பிரச்சினை என்றால் ஜான்சி ராணியாக மாறுவோம், வேலு நாச்சியாராக மாறுவோம் என்றெல்லாம் சொன்ன பிரேமலதா அவர்கள், தமிழகத்தில் பெண்களுக்கு பிரச்சினை என்றால் துர்காவாக மாறுவோம் என்று சொல்லவில்லையே அந்த பிரச்சினையை மட்டும் ஸ்டாலின் அண்ணா பார்த்துக்கொள்வார் என்று விட்டு விட்டாரே பெண்கள் பிரச்சினையில் மட்டும் . அண்ணனுக்கு சங்கடம் தரக்கூடாது என்ற நல்ல எண்ணமா ? ..
சைடு கேப்ல அரை பெட்டி, கால் பெட்டி எதுவும் எதிர் திசையில் இருந்து கொடுத்திருப்பார்களோ?ஸ்டாலினே கலங்கிக் கொண்டிருக்கும் ஒரு விசயத்தை கையில் எடுத்து எதற்காக இந்த சேம் சைடு கோல்?
உண்மையை தைரியமாக சொன்ன பிரேமலதாவிற்கு நன்றி.
முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு டவுட்டு. பிரேமலதா நல்லவரா, கெட்டவரா? அவரின் சேர்க்கை திமுகவுக்கு நல்லதா, அல்லது கெட்டதா?
கெட்டிக்காரரின் பொய்யும் புரட்டும் டக்கு முக்கு டிக்கு தாளம் எட்டு நாளிலே புரிஞ்சு போகும் டக்கு முக்கு டிக்கு தாளம். என்னம்மா இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க.
ஒரு பெண்ணாக பிரேமலதா பேசியது முழு உண்மை
முழு இந்தியாவிலும், போதை கலாச்ச்க்கரம் வர கரணம், அதானியின் துறை முகம்.
கரணம் போடறீங்களே ... லைட்டா எடுத்துக்கிட்டு கருத்து எழுதினீங்களா ?
மாப்பிள்ளை ரொம்போ நல்லவரு. எப்பவாவது ஒரு சிகரெட பிடிப்பாரு. அதுவும் எப்பவாவது தண்ணி அடிக்கும் போதுதான்—- கதை அப்படியே தொடர்வதைக் கேட்டிருக்கோம்.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி. அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி. கொண்டுவந்தான் ஒரு தோண்டி. அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி.
தி.மு.க கிட்ட புடிச்ச விசயம் என்னன்ன அவங்கள பாதிக்கிற மாதிரி விசயம் வெளிய வந்தா பதிலே சொல்லாம கடந்து போயிருவாங்க. உதாரணம் அ.ராசா ஆடியோ விசயம். எதுக்கு நாம பதில் கொடுத்து பேசி பெருசாக்கனும்? மெளனமாக கடந்து போயிருவோம்.மம்தா பேசிய ஸ்டாலின்,பா.ஜ.க உறவு எதுக்கு பதில் கொடுத்து பெருசாக்கனும்? மெளனமா கடந்து போயிருவோம். சாத்தான் குளம் வழக்கில் போலீசாருக்கு மரண தண்டனை.தி.மு.க அதிகம் ரியாக்ட் காண்பிக்கல. காரணம் ஓவரா பேசுனா இப்ப நடக்குற விசயங்கள் .கத்தி திரும்ப நம்ம மேல திருப்பி பாயும். மெளனமா கடந்து போயிருவோம்.அது போலத்தான் பிரேமலதா மேடையில் வைத்த குற்றச்சாட்டையும் மௌனமா கடந்து போயிருவாங்க.மேலும்
-
பஞ்சு உற்பத்தி 291 லட்சம் பேல்கள் உள்நாட்டு தேவை 328 லட்சம் பேல்கள் மத்திய ஜவுளித்துறை கணிப்பு
-
ஒடிஷாவில் 'செமி கண்டக்டர்' ஆலை
-
ஆயிரம் சந்தேகங்கள்: தெரியாதவரின் பணம் வங்கி கணக்குக்கு வந்தால் என்ன செய்யலாம்?
-
திவால் நடைமுறையை ஒழுங்குபடுத்தும் ஐ.பி.சி., - 2.0
-
'ஏசி, மொபைல், பிரிஜ், டிவி ' விலை இம்மாத இறுதியில் உயர்கிறது
-
வாழைத்தார், தேங்காய் ரூ.9.81 லட்சத்துக்கு ஏலம்