சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்; பறக்கும் படை நடவடிக்கை

7


சென்னை: சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகளை உரிய ஆவணங்கள் ஏதுமில்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


தமிழகத்தில், ஏப்., 23ம் தேதி சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


அந்தவகையில், சென்னை அடையாறில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் உரிய ஆவணங்கள் ஏதுமில்லாததால் ரூ.245 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்தனர்.


பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் வருமானவரி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக சென்னை சாஸ்திரி நகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement