குடும்ப அரசியல் வீழ 2026 தேர்தல் முடிவு முக்கியம்: அண்ணாமலை
ராமநாதபுரம்: குடும்ப அரசியல் வீழ 2026 தேர்தல் முடிவு முக்கியம். கடந்த வாரம் தலைமை செயலாளர் மாற்றம், 2 நாட்களுக்கு முன் டிஜிபி மாற்றம், 23ம் தேதி முதல்வரை மாற்ற வேண்டும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அதிமுக வேட்பாளர் மலேசியா பாண்டிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை பேசியதாவது: வெயிலை பொருட்படுத்தாமல் எனக்காக காத்து இருக்கிறீர்கள். இங்கு போட்டியிடும் திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் போக்குவரத்து துறை அமைச்சர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், பால்வளம், வனத்துறை என்று ஒவ்வொரு பிரச்னைக்காக மாற்ற பட்டுள்ளார். ரொட்டேஷன் (Rotation) அமைச்சர் ராஜகண்ணப்பன். இவர் செல்லும் இடம் எல்லாம் எதிர்ப்பு, அமைச்சரை ஓட்டு கேட்டு வர வேண்டாம் என சொல்லி உள்ளனர்.
படுகொலைகள்
2 பேர் இருந்து கொண்டு உயிரை வாங்குகிறீர்கள் என்று காங்கிரஸ் கட்சியை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சொல்லி உள்ளார். 5 வருடம் பிறகு தேர்தல் நேரத்தில் அமைச்சர் மக்களை சந்திக்கிறார். திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில் பெண்களுக்கான எதிரான குற்றம் 2080 கற்பழிப்பு வழக்குகள், 8,008 படுகொலைகள் நடந்து உள்ளது.
குழந்தைகள் பாலியல் குற்றம் 39,900 நடந்து உள்ளது. பிரேமலதாவே முதல்வரை மேடையில் வைத்துக் கொண்டு போதை கலாச்சாரம் பற்றி கூறி உள்ளார். இந்த 5 ஆண்டு செய்ததை சொல்வதில்லை. அடுத்த 5 ஆண்டு செய்ய போவது குறித்தும் சொல்வது இல்லை, அவர்களுக்கு தெரிந்தது சமஸ்கிருதம், ஹிந்தி மட்டுமே பேசி வருகின்றனர். சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு சந்தி சிரிக்கிறது.
8 ஆயிரம் டோக்கன் பிரச்னையில் தேர்தல் கமிஷன் தலையிட்டுள்ளது. மே 4ம் தேதிக்கு பிறகு இபிஎஸ் ஆட்சி புரிவார். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பிரதமர் மோடி நிறைய செய்துள்ளார். மருத்துவக்கல்லூரி, ராமேஸ்வரம் ரயில்வே நிலையம் , 1800 கோடி ரூபாய் பரமக்குடி ராமநாதபுரம் 4 வழி சாலை, ரூ.3,900 கோடி செலவில் ஜல்ஜீவன் திட்டம் மூலம் ராம்நாடு, புதுக்கோட்டை மாவட்டம் பலன் பெறும்.
குடும்ப அரசியல்
இந்த மாவட்டத்தில் 47% மாவட்டத்தில் குழாய் மூலம் நீர் வழங்கப்படுகிறது. மற்ற மாவட்டதில் 99% நிறைவடைந்து உள்ளது. குடும்ப அரசியல் வீழ 2026 தேர்தல் முடிவு முக்கியம். கடந்த வாரம் தலைமை செயலாளர் மாற்றம், 2 நாட்களுக்கு முன் டிஜிபி மாற்றம், 23ம் தேதி முதல்வரை மாற்ற வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
தமிழக அரசியல் களம் அனல்பறக்கிறது. அரசியல் கட்சி தலைவர்களின் சூறாவளி பிரசாரம் தினமலர் யூடியூப் சேனல் உள்ளிட்ட இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
ராமநாதபுரத்தில் அண்ணாமலை பிரசாரம்; நேரலை பார்க்க கிளிக் செய்யவும்
1. குடும்ப அரசு வீழ வேண்டும். அதுவும் கட்டாயம் விழவேண்டும். அவரோடுச் சேர்ந்த மற்றைய அமைச்சரவையில் சேவைசெய்ய தகுதியற்ற தலைவர்களும் மக்கள் அவர்களையும் தேர்தலில் தூக்கி யெறியவேண்டும். ஆனால் நாளைய தமிழக மக்களின் நலன் கருதி திராவிடக் கட்சிகள் ஆட்சியமைக்க வேண்டும். பாஜக தமிழகத்தில் வேரூன்றுவதை மக்கள் ஏற்கக் கூடாது.
பிஜேபி குடும்ப அரசியலை சொல்கிறார் இந்த வெத்து வீரர்
தமிழனை காட்டி கொடுக்கும், திமுக எதிர்க்கும் சாங்கி எட்டப்பாக்கள் தமிழ்நாட்டில் பிஜேபி என்னும் பெயரில் இருக்கும் வரை தமிழனை அழிக்க தான் வடக்கன் நினைப்பான்...
குடும்ப அரசியல் வீழ 2026 தேர்தல் முடிவு முக்கியம்: அப்போதும் பீசப்பிக்கு ஆதரவு கிடையாது
ஆமா உனக்கு 200 ரூவாவும் சோறும்தான் முக்கியம், அடிமையா இருந்து இருந்து பழகி போச்சு இல்ல
எந்த குடும்பத்தை சொல்கிறிர்கள் மத்திய அமைச்சர் பீயூஸ் கோயல் அவர்களையா அல்லது தலைவர் நபின் அவர்களையா அல்லது நைனார் அவர்களையா
என்ன சிவநாயகம் உனக்கு தெரியாதா....
வாரிசு அரசியல் .... குடும்ப அரசியல் ... இரண்டுக்கும் வேறுபாடு அறியாமல் பதிவிடும் கோல்மால்புர முரட்டு அடிமைகள் .....
ஹா ஹா என்ன வேற்றுமை உங்களுக்கு MGR குடும்பம் செய்தால் ஓகே , கோயல் மூன்று தலைமுறை தலைவர் , குரரசாமி கேட்க தைரியம் இருக்கா
குறிப்பாக திமுக குடும்ப அரசியல் முற்றிலும் வீழவேண்டும் அது மக்கள் நினைத்தால் மட்டுமே சாத்தியம். மக்களே திமுக குடும்ப அரசியலை வீழ்த்த ரெடியா?
கஞ்சா போதை அட்டகாசம் , கற்பழிப்புகள், கொலை, கொள்ளை எல்லாம் மடைமாற்றி கொள்ளை அடிப்பது மட்டுமே ஸ்டாலின் கூட்டம் செய்யும் திராவிஷ மாடல்...புரிந்தவர் பிஸ்தா
EPS ::::::: TNPSC GST NEET அரசு வேலைக்கு தமிழ் தேவையில்லை என்பதற்கு கையெழுத்து போட்ட உத்தமர் கூட்டம்
காமெடி துக்ளக் மன்னர் குடும்பம் நடத்தும் பள்ளியில் மாநில பாடத்திட்டத்தை ஏற்று சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை நீக்க தயாரா ????
TNPSC வெளி மாநிலத்தவர் பங்கு பெறலாம் என்று ஒரு AENDMENT போட்டு தமிழக மாணவர்கள் வாழக்கையை சீரழித்த கூட்டம் இன்று TANGEDCO வில் சர்மா அங்கித் நாயக் எல்லாம் வேலைக்கு சேர்ந்து இருக்கிறார்கள் , யார் திணித்தது என்று தெரியும் ,மேலும்
-
பாமக குழப்பங்களுக்கு ஸ்டாலினும், சபரீசனும்தான் காரணம்; அன்புமணி புகார்
-
உண்மை உறங்காது; நமக்காக பிரசாரம் செய்யும் பிரேமலதாவுக்கு நன்றி; இபிஎஸ்
-
தமிழகத்தை முற்றுகையிட்ட மற்ற மாநில முதல்வர்கள்: தேஜ கூட்டணி ஒற்றுமை ‛‛இண்டி'' கூட்டணியில் இல்லை!!
-
கரும்பு சாறு பிழிந்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்; அண்ணாமலை- வானதி பைக் பேரணி
-
போன் போட்டா வந்து சேருது பணம்!
-
தென் இந்தியாவில் தொகுதிகள் குறையாது: இறுதிகட்ட பிரசாரத்தில் சந்திரபாபு நாயுடு பேச்சு