ஓட்டு கட்டட பள்ளிகள் சீரமைக்கப்பட வேண்டும்

திருப்புல்லாணி: திருப்பதி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகள் பெருவாரியான ஊராட்சிகளில் ஓட்டு கட்டடத்தில் தற்போது இயங்கி வருகிறது.

இந்நிலையில் மழை காலங்களில் மழை நீர் பாதிப்பை சந்திக்கும் பள்ளிகளை கண்டறிந்து ஓட்டு கட்டடத்தை எடுத்து விட்டு அவ்விடத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கு உரிய திட்டமிட்டு மதிப்பீடுகளை ஒதுக்க வேண்டும்.

இவ்விஷயத்தில் முதன்மைக் கல்வி அலுவலரின் ஆலோசனை அவசிய தேவையாக உள்ளது என பள்ளி மேலாண்மைக் குழுவினர் தெரிவித்தனர்.

Advertisement