வரத்து கால்வாயில் கழிவுநீர் தேங்கி புதர்மண்டியுள்ளது

கமுதி: கமுதி அருகே பேரையூர் பெரிய கண்மாயிலிருந்து எஸ்.பி.கோட்டை கண்மாய்க்கு செல்லும் வரத்து கால்வாயில் கழிவுநீர் தேங்கி நாணல் செடிகள் வளர்ந்து புதர்மண்டி இருப்பதால் விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை உருவாகும்.

கமுதி அருகே சுற்றியுள்ள கிராமங்களுக்கு விவசாயத்திற்கு வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் செல்வதற்காக வரத்து கால்வாய் வசதி உள்ளது. கமுதி அருகே பேரையூர் பெரிய கண்மாயிலிருந்து எஸ்.பி.கோட்டை, இலந்தைகுளம் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக வரத்து கால்வாய் வசதி உள்ளது. இங்கு கடந்த பல ஆண்டுகளாகவே தூர்வாரப்படாமல் உள்ளது.

இதனால் பேரையூர் அரசு கால்நடை மருத்துவமனை அருகே செல்லும் வரத்து கால்வாயில் கழிவுநீர் தேங்கி நாணல் செடிகள் வளர்ந்து புதர்மண்டி உள்ளது. இதனால் பருவமழை காலத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் வரத்து கால்வாய் சுருங்கியும் துார்வாரப்படாமல் உள்ளது. எனவே இந்த கோடை காலத்தை கருத்தில் கொண்டு விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் வசதியாக நாணல் செடிகள அகற்றி முறையாக துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

---

Advertisement