'எதிர்தரப்புக்கு சாதகமா பேசுறாரே!'

1

தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில், சென்னை, பெரம்பூரில் தேர்தல் பிரசார கூட்டம் சமீபத்தில் நடந்தது.

இதில், அக்கட்சியின் மூத்த தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் பேசும்போது, 'ஒரு ஊரில் பேராசை பிடித்த மனிதர், பக்கத்து வீட்டுக்காரரிடம் செம்பு குடத்தை இரவல் வாங்கினார். சில நாட்கள் கழித்து, குட்டி செம்பு குடத்தையும் சேர்த்து கொடுத்து, 'உங்களது செம்பு குடம், குட்டி போட்டது' எனக் கூறினார்.

சில நாட்கள் கழித்து, பக்கத்து வீட்டுக்காரரிடம் வெள்ளி குடத்தை வாங்கிய பேராசை மனிதர், அதை திருப்பித் தரவே இல்லை. 'பிரசவத்தில் வெள்ளி குடம் இறந்து விட்டது' எனக்கூறி, வெள்ளி குடத்தை அபகரித்து விட்டார்.

'அதுபோலவே தி.மு.க., அரசும், உங்களுக்கு சிலவற்றை இலவசமாக கொடுத்து விட்டு, பெரிதாக முழுங்கி வருகிறது...' என்றார்.

இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'நம்ம தலைவர், இப்ப நிறைய இலவசங்களை அறிவிச்சிருக்காரே... அது தெரியாம, இவர் எதிர்தரப்புக்கு சாதகமா பேசுறாரே...' என, முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.

Advertisement