போலீஸ் செய்திகள்... மதுரை
வெடிகுண்டு மிரட்டல்
மதுரை: தல்லாகுளம் தலைமை தபால் அலுவலகத்திற்கு நேற்று காலை 11:30 மணிக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
அதில், 'மாவட்டம் முழுதும் உள்ள போஸ்ட் ஆபீஸ்கள், ரேஸ்கோர்ஸ், கோச்சடையில் உள்ள பாஸ்போர்ட் ஆபீஸ்களில் 'சயனைடு' கலந்த ஆர்.டி.எக்ஸ்., வெடிகுண்டுகள் மதியம் 12:30 மணிக்கு வெடிக்கும். அனைவரையும் வெளியேற்றவும்' என தெரிவிக்கப்பட்டு இருந்தது. போலீசார் மோப்ப நாய்கள் உதவியுடன் மாவட்டம் முழுதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பின், அது புரளி என தெரிந்தது. வெடிகுண்டு சோதனை தடுப்புப் பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருநகர் தபால் நிலையத்தில், பொதுமக்கள், ஊழியர்களை துணை அஞ்சலக அதிகாரி ராமகிருஷ்ணன் உடனே வெளியேற்றினார். திருநகர் போலீசார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோதனையிட்டனர். மதியம் 2:30 மணிக்கு பணியாளர்களை அலுவலகத்தினுள் அனுமதித்தனர்.
விபத்தில் வீரர் பலி
கொட்டாம்பட்டி: துாத்துக்குடி மாவட்டம் திருமங்கலகுறிச்சி சுடலைமணி 34, லடாக்கில் ராணுவ வீரராக பணிபுரிந்தார். நேற்று தனது மாமனார் ஊரான சென்னை முகப்பேருக்கு மனைவி பிரியா 29, குழந்தைகள் சுமித் 6, மகிஷா ஸ்ரீ 3, ஆகியோருடன் காரில் சென்றனர். காரை மாமனார் கருப்பசாமி 50, ஓட்டினார். மதியம் அய்யாபட்டி விலக்கருகே கட்டுப்பாட்டை இழந்தகார், ரோட்டோர கடையின் பக்கவாட்டுச் சுவரில் மோதியது. இதில் சுடலை மணி இறந்தார். மற்ற நால்வரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
---மாணவர் தற்கொலை
திருமங்கலம்: நிலையூரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் ஹரிஷ் 17, இவர் பசுமலை தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவர் அடிக்கடி அலைபேசியில் பேசியதால் பெற்றோர் கண்டித்தனர். அலைபேசியை வாங்கி வைத்து, தேர்வு முடிந்த பின் தருவதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு ஹரிஸ் தற்கொலை செய்து கொண்டார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
கோவையில் காணாமல் போன 'காம்ரேடுகள்'!
-
இன்னும் தேர்தலுக்கு 18 நாட்கள் தான்; அனல் பறக்கும் தினமலர் தேர்தல் களம்!
-
அமித் ஷாவின் நம்பிக்கை மேற்கு வங்கத்தில் கரையேறுமா?
-
விழுப்புரம் மாவட்டத்தில் 88 பேர் மனு தாக்கல்
-
வானுார் தொகுதியில் தி.மு.க.,வேட்பாளர் மனு தாக்கல்
-
அரசு பஸ் கண்டக்டர் தாக்கிய வாலிபர் கைது