மதுரையில் களமிறங்குகிறார் சுந்தர் சி!: அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டி
சென்னை: அதிமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், மதுரை மத்திய தொகுதியில் திரைப்பட இயக்குநர் சுந்தர் சி போட்டியிடுகிறார் என புதிய நீதிக்கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதியில் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். இதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி மற்றும் போட்டியிடும் வேட்பாளர் பெயர் ஆகியவை பாஜ சார்பில் வரும் திங்கள் கிழமை அறிவிக்கப்பட உள்ளது. அறிவிப்பு வெளியானதும் முறைப்படி வேட்பாளரை அறிமுகப்படுத்த உள்ளோம். இவ்வாறு ஏ.சி. சண்முகம் கூறியுள்ளார்.
சுந்தர். சியின் மனைவி குஷ்பு, பாஜவில் உள்ளார்.
மதுரை மத்திய தொகுதி தற்போது திமுகவின் வசமுள்ளது. கடந்த 2021 தேர்தலில் இங்குப் போட்டியிட்ட அமைச்சர் தியாகராஜன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (7)
ஆரூர் ரங் - ,
28 மார்,2026 - 15:27 Report Abuse
ஃப்ரெண்ட்லி ஃபைட். 0
0
Reply
A.Gomathinayagam - chennai,இந்தியா
28 மார்,2026 - 14:00 Report Abuse
அதாவது ஓட்டு வங்கி இல்லாத பிரிவினருக்கு எந்த கட்சியு ம் வாய்ப்பு கொடுக்காத நிலையில் இந்த கட்சி கொடுத்திருக்கிறது .வெற்றி பெறுவாரா ??: 0
0
Reply
chennai sivakumar - chennai,இந்தியா
28 மார்,2026 - 13:53 Report Abuse
சினிமா கவர்ச்சி திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் முன்னால் அறிவு ஜீவி ஆட்டம் கண்டுவிடும் 0
0
Reply
bharathi - ,
28 மார்,2026 - 13:38 Report Abuse
Just a dummy nomination 0
0
Reply
lana - ,
28 மார்,2026 - 13:31 Report Abuse
அந்த அறிவு ஜீவி ஐ அந்த கட்சியே தூக்கி எரிந்து விட்டது 0
0
Reply
கேடி ராகவன் ஐயங்கார் - ,இந்தியா
28 மார்,2026 - 13:12 Report Abuse
அறிவுஜீவி பழனிவேல் தியாகராஜன் எளிதில் வெற்றி பெற்றுவிடுவார். வெற்றி வித்தியாசத்தை அதிகரிக்க மட்டுமே உழைக்கவேண்டும். 0
0
Arjun - ,இந்தியா
28 மார்,2026 - 14:13Report Abuse
அறிவுஜீவிதான் ஆனால் இருக்கும் 0
0
Reply
மேலும்
-
வடாரண்யேஸ்வரர் கோவில் தேர் திருவிழா விமரிசை
-
ஏரி நீர்வரத்து கால்வாயை சீரமைக்க மப்பேடு விவசாயிகள் கோரிக்கை
-
'சாம்பியன்' ஆன இளம் 'பாக்சிங்' வீரர் சாம்பியன் குத்துச் சண்டை போட்டியில் சாம்பியன் ஆன மாணவன்
-
தமிழகத்தைக் காக்க திமுகவை நிராகரிப்போம்; நயினார் வலியுறுத்தல்
-
திருத்தணி சக்தி பப்ளிக் பள்ளி ஆண்டு விழா
-
ரூ.1.67 லட்சம் கையாடல் துணிக்கடை ஊழியர் கைது
Advertisement
Advertisement