அமமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் டிடிவி தினகரன்
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி பொதுச்செயலாளர் வெளியிட்டார்.
அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., அ.ம.மு.க., - த.மா.கா., புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி உள்ளன. இதில், பா.ஜ.,வுக்கு 27, பா.ம.க.,வுக்கு 18, அ.ம.மு.க.,வுக்கு 11, தமாகாவிற்கு 5 , இந்திய ஜனநாயக கட்சிக்கு 2, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் புரட்சி பாரதம் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் போக, மீதமுள்ள 169 தொகுதிகளில், அ.தி.மு.க., போட்டியிடுகிறது. தற்போது அதிமுக கூட்டணி கட்சிகள் தங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர் பட்டியலை வெளிடும் பணியில் இறங்கி உள்ளது. அந்த வகையில் அமமுக சார்பில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி பொதுச்செயலாளர் வெளியிட்டார்.
அமமுக வேட்பாளர்கள்;
1.பெரியகுளம்- கதிர்காமு
2.மன்னார்குடி- காமராஜ்
3.திருவையாறு- கார்த்திகேயன்
4.காரைக்குடி- தேர்போகி பாண்டி
5.திருப்பத்துார்- ஞானசேகரன்
6.நாங்குநேரி- இசக்கிமுத்து
7.ஒட்டப்பிடாரம்-சுந்தர்ராஜன்
8.திருச்சி மேற்கு- செந்தில்நாதன்
9.சைதாப்பேட்டை- செந்தமிழன்
10.பூந்தமல்லி- ஏழுமலை
11.மடத்துக்குளம்- சி.சண்முகவேல்
தேர்தல் அறிக்கை
120 வாக்குறுதிகளை கொண்ட தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிட்டார். அதில் முக்கியமான வாக்குறுதிகள் பின்வருமாறு:
* 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்ளாக உயர்த்தப்படும்.
* விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
* ஆசிரியர்கள் விரும்பும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம்.
* ஆண்களுக்கு சுய உதவி நிதி வழங்கப்படும்.
* மதுரையை போல் வட தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்படும்.
* ஜெயலலிதா, முத்துராமலிங்க தேவர் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தப்படும்.
* கச்சத்தீவை மீட்க வலியுறுத்தப்படும்; கனிம வளக்கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரசாரம்
''நானும், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்து தஞ்சாவூர், ஆண்டிப்பட்டியில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம்'' என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது எடப்பாடியார் மீது குற்றம் இல்லை...
தமிழக பாஜக விற்குள் வளர்ந்து உள்ள களைகள் செய்து வரும் சித்து வேலைகள்...
தமிழக அரசியல் சாக்கடையைச் சுத்தம் செய்வது எளிதல்ல என்பது அரசியலில் நுழையும் போதே அவருக்குத் தெரியும்...
கால் காசுக்கு பொறுமானமில்லாத உன் போன்ற தற்குறிகள் எல்லாம் எகத்தாளத்துடன் ஏகடியம் பேசும் என்று அறிந்தே வந்து உள்ளார்...
ஒன்னுமில்ல தினகரனுக்கு 11சீட். பிரேமாவுக்கு பத்து சீட்
எடப்பாடி சாமர்த்தியத்தை மெச்சாமல் இருக்கமுடியவில்லை. பத்து வருஷம் பச்சை இங்கில் கையெழுத்து போட்டவன் நான். எடப்பாடி என்னும் தற்குறி என்னை பற்றி பேச தகுதி இல்லை என்று எக்காளமிட்டவர இப்படி புலம்பவிட்டுவிட்டார் அதுவும் கொஞ்சம் கூட பெரிய பிரயத்தனம் இல்லாமல்.. ஒரே கல்லில் பல மாங்காயை சாமர்த்தியமாக அடித்து பிஜேபிக்கும் சேர்த்து பாடம் புகட்டிவிட்டார். கிளை செயலாளருக்கும் நேரடி நியமனத்துக்கு தேர்தல் அரசியலில் இருக்கும் பெரிய அறிவுக்கூர்மை வித்தியாசத்தை தெளிவுபடுத்தி இனிமேலும் நேரடி நியமனங்களை தவிர்க்க சொல்லிக் கொடுத்து விட்டார்.
நல்லா எரியிறா மாதிரி இருக்கு
எரியவில்லை, அனால் அண்ணாமலை நேற்று வீட்டை விட்டு வெளியே வரவில்லை யாம் அழுது கொண்டே இருந்தாராம்மேலும்
-
இன்ஜின் பழுது: இண்டிகோ விமானம் டில்லியில் அவசர தரையிறக்கம்
-
திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு
-
புதுச்சேரியில் மீண்டும் தேஜ கூட்டணி அரசு: பிரதமர் மோடி
-
மதுரையில் களமிறங்குகிறார் சுந்தர் சி!: அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டி
-
தேர்தல் ரேஸில் எந்த குதிரை முந்துது?: திமுகவா... அதிமுகவா?
-
மோடியுடன் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலாக உள்ளேன்; நேபாள பிரதமர் விருப்பம்