தேர்தல் ரேஸில் எந்த குதிரை முந்துது?: திமுகவா... அதிமுகவா?
நமது சிறப்பு நிருபர்
தமிழக தேர்தல் களம் அனல் பறந்துகொண்டு இருக்கிறது. ஆனால் இந்த போட்டியில் முன்னணி குதிரைகளாக திமுகவும் அதிமுகவும் ஓடிக்கொண்டு இருக்கின்றன. ஆனால் இன்றைய தேதிக்கு எந்த குதிரை முன்னால் ஓடுகிறது என்ற கேள்விக்கு பதில்....
‛‛சாட்சாத், அதிமுக தான் ரேஸில் முந்துகிறது'' என்று சத்தியம் செய்யாத குறையாக கூறலாம்.
காரணங்கள் இதோ:
* கூட்டணி பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது என்னவோ திமுக தான். காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூ.,கள் என்று ஏகப்பட்ட பொதிகளை சுமந்துகொண்டு இருந்த திமுக குதிரை, அதிக ‛‛லோடு'' இருந்ததால் மூச்சு வாங்க ஆரம்பித்தது.
* ஆனால் பாஜ, அமமுக, பாமக என்று அளவான ‛‛லோடு'' சுமந்துகொண்டு இருந்த அதிமுக குதிரை தாமதமாக ஓட ஆரம்பித்தாலும் துாக்குகிற அளவுக்கு சுமை இருந்ததால் சீக்கிரமாகவே பேச்சுவார்த்தையை முடித்து ஒப்பந்தமும் போட்டது.
* திமுக கூடாரத்திலோ நிலைமை தலைகீழ். தொகுதி எண்ணிக்கையில் அடித்துப் பிடித்து ஒரு முடிவுக்கு வந்தவர்கள், தொகுதிகளை முடிவு செய்வதில் இன்னமும் இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்று இருக்கிறார்கள்.
* அதிமுக கூடாரத்திலோ நிலைமை வேறாக இருக்கிறது. கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக, வேட்பாளர் பட்டியலையே அறிவித்துக்கொண்டு இருக்கிறது. இதில் லேசாக ‛‛கசமுசா'' இருந்தாலும் பெரிய அளவில் சத்தம் எழவில்லை.
* பிரசாரத்தையும் திமுக தலவர் ஸ்டாலின் இன்னும் துவக்கவில்லை. தேதியையும் மாற்றி மாற்றி கூறிக்கொண்டு இருக்கின்றனர். அவரது மகனும் துணை முதல்வருமான உதயநிதியும் அப்படியே.
* ஆனால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி சென்னை மயிலாப்பூரில் இருந்து பிரசாரத்தை துவக்கி விட்டார். தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்தின்போது கூட்டணி கட்சியினரையும் கூட வைத்துக்கொள்கிறார்.
* ஆக, தேர்தல் ரேஸில் அதிமுக குதிரை ‛‛அரக்க பரக்க'' ஓடிக்கொண்டு இருக்க, திமுக குதிரை மூச்சு வாங்கி, முக்கிக்கொண்டு இருக்கிறது.
எந்த குதிரையும் முந்தாது தவழும்
மெதுவா ஊத வேண்டும்
எப்படி காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.கவிற்கு தி.மு.க ஊதுவது போலவா?
பார்த்து பார்த்து...மெதுவா பக்குவமா தட்டுங்க...
தேர்தலுக்காக என்று கூறப்படாவிட்டாலும், பிரச்சாரத்தை எடப்பாடி ஏற்கனவே [பொங்கலுக்குப் பிறகு] துவங்கிவிட்டார் .......
ரேஸில் முந்தி, எடப்பாடி அதிமுக என்ற வெண்குதிரையில் தேர்தல் என்னும் கோட்டை அடைந்து, தமிழ்நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டும். அதற்கு எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க வேண்டும்.
ஓடுறது முக்கியமல்ல... இலக்கை நோக்கி ஓடனும்... தெரியும்ல... அவனுவ அங்கங்க கேட் போட்டு வச்சிருக்கானுவ.... நம்மாளுங்க எங்கெங்கு குப்புறக்க அடிச்சி விழப்போறானுவன்னு குடுகுடுப்பையை ஆட்டி சொல்லுங்க சிப்பு நிருபர் ஸாரே
ஆனால் ஜெயிக்க போகும் குதிரை தீயமுக, கடைசி நேர பண பட்டுவாடா கை கொடுக்கும்
ஒருவேளை திருட்டு திமுக ஜெயித்தால் தமிழ்நாடு பாலைவனமாக போகும், எங்கும் தடையின்றி போதை வஸ்துகள் எல்லோருக்கும் கிடைக்கும், ஹிந்து கோவில்கள் அனைத்தும் இடித்து தரைமட்டமாக்க ஆக்கப்படும், ஹிந்துக்கள் அகதிகளாக வேறு மாநிலத்துக்கு போக வேண்டியதுதான்.மேலும்
-
இன்ஜின் பழுது: இண்டிகோ விமானம் டில்லியில் அவசர தரையிறக்கம்
-
திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு
-
புதுச்சேரியில் மீண்டும் தேஜ கூட்டணி அரசு: பிரதமர் மோடி
-
மதுரையில் களமிறங்குகிறார் சுந்தர் சி!: அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டி
-
அமமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் டிடிவி தினகரன்
-
மோடியுடன் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலாக உள்ளேன்; நேபாள பிரதமர் விருப்பம்