புதுச்சேரியில் மீண்டும் தேஜ கூட்டணி அரசு: பிரதமர் மோடி

6

புதுடில்லி: கடந்த ஐந்து ஆண்டுகளில் இரட்டை என்ஜின் தேஜ அரசு புதுச்சேரி மக்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி உள்ளது. மீண்டும் தேஜ அரசை மக்கள் தேர்வு செய்ய உள்ளனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


புதுச்சேரி சட்டசபைக்கு வரும் 9 ம் தேதி தேர்தல்நடைபெற உள்ளது. இத்தேர்தலில், என்ஆர் காங்கிரஸ் , பாஜ மற்றும் அதிமுக இணைந்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளன. கட்சிகள் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஏப்ரல் 3 ம் தேதி புதுச்சேரியில் நடக்கும் பிரசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார்.


இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளில் இரட்டை இன்ஜின் தேஜ கூட்டணி அரசு புதுச்சேரி மக்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி உள்ளது. ஆகவேதான் புதுச்சேரி மக்கள் மீண்டும் என்டிஏ அரசை தேர்ந்தெடுக்க உள்ளனர்.


'எனது வாக்குச்சாவடி வலிமையான வாக்குச்சாவடி - புதுச்சேரி' நிகழ்ச்சியில், மார்ச் 30 மாலை 05:30 மணிக்குப் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். இவ்வாறு அநு்த அறிக்கையில் மோடி கூறியுள்ளார்.

Advertisement