மோடியுடன் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலாக உள்ளேன்; நேபாள பிரதமர் விருப்பம்
காத்மாண்டு: உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலாக உள்ளேன் என வாழ்த்து செய்தி அனுப்பிய பிரதமர் மோடிக்கு நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நன்றி தெரிவித்தார்.
நம் அண்டை நாடான நேபாளத்தில், கடந்த ஆண்டு வெடித்த மாணவர் போராட்டத்தால் பிரதமராக இருந்த கே.பி.சர்மா ஒலி தலைமையிலான கம்யூ., ஆட்சி கவிழ்ந்தது. புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் கடந்த 5ல் நடந்தது.
இதில், ராப் பாடகரும், காத்மாண்டு முன்னாள் மேயருமான பாலேந்திர ஷா தலைமையிலான ஆர்.எஸ்.பி., எனப்படும் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி வெற்றி பெற்றது. நேற்று பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்றார்.
அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார். இந்நிலையில் இன்று நேபாள பிரதமர் பாலேந்திர ஷா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி.
நமது மக்களின் வளர்ச்சிக்காகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், உங்களுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்ற நான் ஆவலுடன் உள்ளேன். இவ்வாறு பாலேந்திர ஷா கூறியுள்ளார்.
நேப்பாள பிரதமர் உணர்ந்ததை ஏன் மற்றவர்கள் இன்னும் உணரவில்லை பாஜக வின் செல்வாக்கு மரியாதை என்பது மோடிஜி என்ற மாண்பிற்கும் மதிப்பிற்குள்ள மாந்தர் உள்ளவரை. தமிழக முதல்வர் அவர் காலத்தில் அவரை சரியாக பயன்படுத்திக் கொள்ள தெரியவில்லை. வருத்தம்தான்
Hope this new Nepal prime minister doesn't get honey trapped by Chinese diplomats as it happened in the past
அறிவாலயத்தில் தளபதியை சந்தித்து மாடல் அரசு நிறுவ ஆலோசனை பெறலாம்
மோடிஜி என்ன உங்கள் நெருங்கிய நண்பரா இணைந்து பணியாற்ற. உண்மையான உலக நாயகன் மோடிஜி. அவரது ஆலோசனை பெற்று பணியாற்றுவேன் என்று சொல்லுங்கள்.மேலும்
-
இன்று இனிதாக (29.03.2026) விருதுநகர்
-
தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
-
கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியில் தொடரும் புதுமுக வேட்பாளர் 'பார்முலா'
-
டாப்ஸ், சிறப்பு டெட் திட்டங்களால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு செக் வைக்கும் தி.மு.க.,
-
கல்குவாரி, கிரஷர் லாரிகளால் 3 ஆண்டுகளில் 30 பேர் உயிரிழப்பு!
-
வேட்பாளர் பட்டியலுடன் கோவிலில் வழிபட்ட முதல்வர்