குமரகுரு கல்வி நிறுவனங்களில் ரூ.16 கோடி கல்வி உதவித்தொகை
கோவை: குமரகுரு கல்வி நிறுவனங்களில், நிறுவனர் மகாலிங்கத்தின் தொலைநோக்குப் பார்வையைப் போற்றும் வகையில், மகாத்மா காந்தி மெரிட்ஸ் ஸ்காலர்ஷிப் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
நடப்பாண்டு, குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி, குமரகுரு பன்முக கலை, அறிவியல் கல்லூரி, கே.சி.டி., பிசினஸ் ஸ்கூல், குமரகுரு வேளாண்மை நிறுவனம் மற்றும் குமரகுரு ஸ்கூல் ஆப் பிசினஸ் ஆகிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 1,675 மாணவர்களுக்கு ரூ.1.6 கோடி கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
குமரகுரு கல்வி நிறுவனங்களின் சேர்மன் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசுகையில், “வெற்றி பெறுவதற்கான ஆசை, விடாமுயற்சி, புது முயற்சிகளுக்கான துணிவு, இலக்கை எட்டும் மன உறுதி ஆகிய நான்கு துாண்கள் வெற்றிக்கு அவசியம்” என்றார்.
கே.பி.ஆர்., குழும தலைவர் ராமசாமி, குமரகுரு கல்வி நிறுவனங்களின் தாளாளர் பாலசுப்ரமணியம், தலைவர் சங்கர் வாணவராயர், குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் எழிலரசி உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
வெளிநாட்டு 'டூர்' ஆசை காட்டிய முஸ்லிம் லீக் நிர்வாகி மீது வழக்கு
-
பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் மீன் சாப்பிட முடியாது: முதல்வர் மம்தா விமர்சனம்
-
தானே மாநகராட்சியில் ரூ.4,500 கோடி மோசடி: கவுன்சிலர்கள் கொந்தளிப்பு
-
38,000 டன் எரிபொருள் வழங்கிய இந்தியாவுக்கு நன்றி: இலங்கை
-
மூன்றாவது முறையாக பா.ஜ., ஆட்சி தேசிய தலைவர் நிதின் நபின் நம்பிக்கை
-
3வது துணை வாக்காளர் பட்டியல் மேற்கு வங்கத்தில் வௌியீடு