தி.மு.க., பிரசார வாகனம் ரெடி 

விழுப்புரம்: விழுப்புரம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் லட்சுமணனுக்காக விசுவாசி ஒருவர் பிரசார வாகனத்தை சொந்த செலவில் தயார் செய்துள்ளார்.

விழுப்புரம் சட்டசபை தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ.,வான லட்சுமணன் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, லட்சுமணனின் ஆதரவாளர்கள், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தீவிர ஓட்டு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், லட்சுமணனின் தீவிர விசுவாசியாக உள்ள தொண்டர் ஒருவர் தனது சொந்த செலவில் பிரசார வாகனத்தை தயார் செய்துள்ளார். தி.மு.க., நகர இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ள சிவமுருகன், தனது மினி சரக்கு வேனை 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், வேட்பாளர் லட்சுமணனுக்காக பிரசார வாகனமாக தயார் செய்துள்ளார். மேலும், இந்த வாகனம் மூலம் தொகுதி முழுதும் ஓட்டு கேட்டு வலம் வர பயன்படுத்த உள்ளார்.

இந்த வாகனத்தில் தி.மு.க., வேட்பாளர் படம், கூட்டணி கட்சிகளின் கொடிகள், எல்.இ.டி., பல்புகள் மற்றும் ஸ்பிக்கர் பாக்சுகள் பொருத்தப்பட்டு, வேட்பாளரிடம் காண்பித்து அனுமதி பெறுவதற்காக தயார் நிலையில் உள்ளது.

Advertisement