இன்று முதல் மனு தாக்கல் வேட்பாளர்களுக்கு அழைப்பு
கடலுார்: சட்டசபை தேர்தலில், போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று முதல் மனு தாக்கல் செய்யலாம் என, மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
சட்டசபை பொதுத்தேர்தல் ஓட்டுப்பதிவு வரும், ஏப்., 23ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வேட்பாளர்கள் இன்று முதல் ஏப்., 6ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம்.
இதில் வரும், 31, மற்றும் ஏப்.1, 3 மற்றும் 5 ஆகிய தேதிகளில் விடுமுறை நாட்களில் மனு தாக்கல் செய்ய இயலாது.
வேட்பாளர்கள் அந்தந்த சட்டசபை தொகுதிக்குட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் காலை 11:00
மணி முதல் மாலை 3:00 மணி வரை வேட்பு மனுவினை அளிக்கலாம்.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலும் அல்லது இணையதளத்தின் வாயிலாகவும் மனு தாக்கல் செய்யலாம். அஞ்சல் மூலமாகவோ அல்லது பிற நபர்கள் மூலமாகவோ மனு வழங்கக்கூடாது.
வேட்பாளர்களுடன் வேட்பாளர் உட்பட, 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்கு 100 மீ., எல்லைக்குள், 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
சட்டசபை பொதுத்தேர்தல் வைப்பு தொகையாக பொதுப்பிரிவினர் 10,000 ரூபாய்; எஸ்.சி., எஸ்.டி., வேட்பாளர்கள் 5,000 ரூபாய்; ரொக்கமாக செலுத்த வேண்டும்.
மனு தாக்கலின் போது வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்பாக உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
வெளிநாட்டு 'டூர்' ஆசை காட்டிய முஸ்லிம் லீக் நிர்வாகி மீது வழக்கு
-
பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் மீன் சாப்பிட முடியாது: முதல்வர் மம்தா விமர்சனம்
-
தானே மாநகராட்சியில் ரூ.4,500 கோடி மோசடி: கவுன்சிலர்கள் கொந்தளிப்பு
-
38,000 டன் எரிபொருள் வழங்கிய இந்தியாவுக்கு நன்றி: இலங்கை
-
மூன்றாவது முறையாக பா.ஜ., ஆட்சி தேசிய தலைவர் நிதின் நபின் நம்பிக்கை
-
3வது துணை வாக்காளர் பட்டியல் மேற்கு வங்கத்தில் வௌியீடு