வாந்தி, காய்ச்சல் பாதிப்பு: 2 வயது குழந்தை இறப்பு

வேளச்சேரி:வாந்தி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட, 2 வயது பெண் குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

வேளச்சேரி, ராஜிவ் நகரை சேர்ந்தவர் பிரவின்குமார் - சுப்புலட்சுமி தம்பதியின் மகள் யுகா, 2. பெற்றோர் வேலைக்கு செல்வதால், குழந்தை பாட்டி, சித்தி பராமரிப்பில் இருந்து வந்தது.

நேற்று முன்தினம் வாந்தி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தை, வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி, குழந்தை உயிரிழந்தது.

மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின்பேரில், வேளச்சேரி போலீசார், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, மரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement