பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் மேற்கு மண்டல ஐ.ஜி., ஆய்வு 

ஆனைமலை: வால்பாறை சட்டசபை தொகுதியில், பதற்றமான ஓட்டுச்சாவடிகளை மேற்கு மண்டல ஐ.ஜி., ஆய்வு செய்தார்.

வால்பாறை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, ஆனைமலை போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில், 110 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. அதில், 45 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில், மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யாபாரதி ஆய்வு செய்தார். அம்பராம்பாளையம், சிங்காநல்லுார், காளியப்பகவுண்டன்புதுாரில் உள்ள பதற்றமான ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்த ஐ.ஜி., அதிகாரிகளுக்கு பாதுகாப்பு குறித்து அறிவுரைகளை வழங்கினார்.

தொடர்ந்து, பொதுமக்கள் பாதுகாப்பாக ஓட்டு செலுத்த தேவையான குடிநீர், கழிப்பிடம், சாமியானா அமைப்பது உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், போலீஸ் ஸ்டேஷன்களில், முன்னாள் கேடிகள், ரவுடிகள் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விசாரித்தும், தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கினார். ஆய்வின் போது, டி.எஸ்.பி. பவித்ரா, இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், எஸ்.ஐ., ஸ்டீபன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement