100 சதவீதம் ஓட்டளிக்க விழிப்புணர்வு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில், 100 சதவீதம் ஓட்டளிக்க பல்வேறு கட்சியினர் மற்றும் அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கிணத்துக்கடவு ஒன்றிய அதிகாரிகள் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் தலைமையில், வடபுதூர், சிக்கலாம்பாளையம் உள்ளிட்ட கிராமப்புறங்களில் உள்ள வாக்காளர்களிடம், ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.

தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், ஒன்றிய அலுவலக பணியாளர்கள் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement