அவிநாசி தொகுதியில் பெண் வேட்பாளர்கள் ஆதிக்கம்

அன்னூர்: அவிநாசி தொகுதியில் அதிக அளவில் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அவிநாசி தனி தொகுதியில் தி.மு.க., சார்பில் அவிநாசியை சேர்ந்த டாக்டர் கோகிலா மணி நிறுத்தப்பட்டுள்ளார். த.வெ.க., சார்பில், முதுநிலை பட்டதாரியான கமலி நிறுத்தப்பட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி சார்பில், அவிநாசியை சேர்ந்த பட்டதாரியான மேனகா நிறுத்தப்பட்டுள்ளார். பா.ஜ., சார்பில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

முக்கியமான நான்கு கட்சிகளில் மூன்றில் பெண்களே வேட்பாளராக அவிநாசி தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் பெண் வேட்பாளர்களின் ஆதிக்கம் அவிநாசி தொகுதியில் அதிகமாகி உள்ளது.

Advertisement