சபலென்கா மீண்டும் சாம்பியன்: மயாமி ஓபனில் கலக்கல்
மயாமி: மயாமி ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்காவில், மயாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் 'நம்பர்-1' பெலாரசின் அரினா சபலென்கா, 4வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் கோகோ காப் மோதினர். முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றிய சபலென்கா, 2வது செட்டை 4-6 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் எழுச்சி கண்ட இவர், 6-3 என வென்றார்.
இரண்டு மணி நேரம், 9 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சபலென்கா 6-2, 4-6, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2வது முறையாக (2025, 2026) சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இது, இவரது 24வது டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பட்டம். இதில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டம் அடங்கும்.
ஒரே சீசனில் இந்தியன் வெல்ஸ், மயாமி ஓபனில் சாம்பியன் பட்டம் ('சன்ஷைன் டபுள்') வென்ற 5வது வீராங்கனையானார் சபலென்கா. ஏற்கனவே ஜெர்மனியின் ஸ்டெபி கிராப் (1994, 1996), பெல்ஜியத்தின் கிம் கிளைஸ்டர்ஸ் (2005), பெலாரசின் விக்டோரியா அசரென்கா (2016), போலந்தின் இகா ஸ்வியாடெக் (2022) இப்படி சாதித்திருந்தார். தவிர, கோகோ காப்பிற்கு எதிராக 7வது வெற்றியை பதிவு செய்தார் சபலென்கா. இருவரும் மோதிய 13 போட்டியில், சபலென்கா 7, கோகோ காப் 6ல் வெற்றி பெற்றனர்.
மேலும்
-
வெளிநாட்டு 'டூர்' ஆசை காட்டிய முஸ்லிம் லீக் நிர்வாகி மீது வழக்கு
-
பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் மீன் சாப்பிட முடியாது: முதல்வர் மம்தா விமர்சனம்
-
தானே மாநகராட்சியில் ரூ.4,500 கோடி மோசடி: கவுன்சிலர்கள் கொந்தளிப்பு
-
38,000 டன் எரிபொருள் வழங்கிய இந்தியாவுக்கு நன்றி: இலங்கை
-
மூன்றாவது முறையாக பா.ஜ., ஆட்சி தேசிய தலைவர் நிதின் நபின் நம்பிக்கை
-
3வது துணை வாக்காளர் பட்டியல் மேற்கு வங்கத்தில் வௌியீடு