பைக்கில் எடுத்து வந்த ரூ.96,000 பறிமுதல்

ஆர்.கே.பேட்டை: தேர்தல் விதிமீறி இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட, 96,000 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

ஆர்.கே.பேட்டை அடுத்த விடியங்காடு புதுார் கிராமத்தில், வேளாண் உதவி இயக்குனர் பிரேம் தலைமையிலான பறக்கும் படையினர், நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 'ஹோண்டா ஆக்டிவா' இருசக்கர வாகனத்தை மடக்கி சோதனை நடத்தினர்.

இதில், ராணிப்பேட்டை மாவட்டம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர், உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த 96,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Advertisement