ஓட்டுக்கு பரிசு பொருள் கொடுத்தால் புகார் அளிக்கலாம்: கலெக்டர் தகவல்
சிவகங்கை:சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு வேட்பாளர், கட்சியினர் பரிசு பொருள், மது கொடுத்தால் புகார் அளிக்கலாம் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். சிவகங்கையில் 4 சட்டசபை தொகுதிகளுக்கு ஏப்., 23 ல் தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதியை மீறி வேட்பாளர், கட்சியினர் குறித்தும், ஓட்டுக்காக பரிசு பொருட்கள், மது, இலவச பொருட்களை கொடுத்தால் அவர்கள் குறித்து சி- விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம்.
இதற்காக அலைபேசியில் சி-விஜில் செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் புகார் அளிக்கலாம். புகார் தருபவர் குறித்து ரகசியம் காக்கப்படும். அதே போன்று ஓட்டுச்சாவடி பணியில் ஈடுபட உள்ள ஓட்டுச்சாவடி அலுவலர்களான அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு மார்ச் 28 ல் முதற்கட்ட பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் பங்கேற்காதவர்கள் கண்டிப்பாக இன்று அந்தந்த சட்டசபை தொகுதி தலைமையிடத்தில் நடக்கும் பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என்றார்.
மேலும்
-
'ரிமாண்ட்'டுக்கு வந்த நெஞ்சுவலி ஜாமினுக்காக உடனே குறைந்தது; தி.மு.க., நிர்வாகி அலப்பறை
-
தெரியாத கணக்கில் இருந்து பணம் வந்தால் ஆபத்தா?
-
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சுழற்சி முறையில் பாதுகாப்பு: த.வெ.க.,வினருக்கு விஜய் அறிவுறுத்தல்
-
தி.மு.க.,வுக்கு தாவிய காங்., நிர்வாகி; வெளிச்சத்துக்கு வந்த கூட்டணி விரிசல்?
-
'பூத் ஏஜன்ட்'களுக்கு இன்னொரு 'கவனிப்பு'; விபரங்களை சேகரிக்கும் தி.மு.க., தலைமை
-
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை: 43 சதவீதத்துடன் தமிழகம் முன்னிலை