உடல் நலம் பாதித்த 'ரீல்ஸ்' பாட்டி மரணம்

உத்தர கன்னடா: 'ரீல்ஸ் பாட்டி' என அறியப்பட்ட 93 வயது மூதாட்டி, நேற்று உயிரிழந்தார்.

உத்தர கன்னடா மாவட்டம் எல்லாபூர் தாலுகா கெரேஹொசஹள்ளியை சேர்ந்தவர் லட்சுமி நாயக், 93. இவரின் கொள்ளுபேரன் சுராஜ் ஆச்சாரி. சில ஆண்டுகளாக தன் பாட்டியுடன் சேர்ந்து, 'ரீல்ஸ்' செய்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார்.

பாட்டியின் அப்பாவித்தனமான நடிப்பு, சமூக வலைதளத்தில் பரவியது. சில நேரம் பாட்டி இல்லாமல் ரீல்ஸ் பதிவேற்றம் செய்தபோது கூட, 'ஏன் பாட்டியை நடிக்க வைக்கவில்லை' என கேட்டனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி நேற்று உயிரிழந்தார்.

Advertisement