ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சுழற்சி முறையில் பாதுகாப்பு: த.வெ.க.,வினருக்கு விஜய் அறிவுறுத்தல்
சென்னை: 'ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில், கட்சி நிர்வாகிகள் சுழற்சி முறையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும்' என, த.வெ.க., தலைவர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக, த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், வரும் மே 4ம் தேதி எண்ணப்படுகின்றன. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன், தமிழகம் முழுதும் 30க்கும் அதிகமான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
அரசியல் கட்சியினர், வேட்பாளர்களின் முகவர்களும் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, த.வெ.க., முக்கிய நிர்வாகிகளுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே நேற்று விஜய் ஆலோசனை நடத்தினார்; அவர், சில ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது, 'ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில், பாதுகாப்பு பணியில் வேட்பாளர்கள் ஈடுபட வேண்டும். மாவட்ட செயலர்கள் தலைமையில், எட்டு மணி நேரத்துக்கு ஒரு குழு என்ற அடிப்படையில், சுழற்சி முறையில் 14 நிர்வாகிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
'ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறையாவது, வேட்பாளர்கள், நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும்.
'ஓட்டு எண்ணிக்கை அன்று, த.வெ.க., நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கையின்போது, ஒவ்வொரு சுற்றின் முடிவிலும், எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
'ஓட்டு எண்ணிக்கையின்போது, கவுன்டர் உள்ளே, கட்சி சார்பில் எத்தனை பேர் இருப்பர் என்ற பட்டியலை, இன்றைக்குள் வேட்பாளர்கள் கொடுக்க வேண்டும்' என, விஜய் அறிவுறுத்தினார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நீங்கநல்லா தூங்காமல் காவல் காருங்கள். நான் நன்றாக வீட்டில் வழக்கம் போல தூங்குகிறேன் விஜய்
6 மணிக்கு மேல் எந்த தற்குறியும் வேலை செய்யாது
பணையூர் பண்ணையார் வீட்டு அருகில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஓட்டுப் பதிவு இயந்திரத்தை கொண்டு வந்து வைக்கவும் அப்பதான் பணையூர் பண்ணையார் வீட்டிலிருந்தே ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டே காவல் காக்க முடியும்
போங்கப்பா
நண்பா, நண்பீஸ், ஹொவ் ஆர் யு ?
அனில்கள் மீது கேமரா பொருத்தி, ஜன்னல் வழியாக உள்ளே அனுப்பி, பனையூரிலிருந்து கண்காணிக்கலாம். அருகில் இருக்கும் மரங்கள் பத்திரம்.மேலும்
-
ஜப்பான் 6.2 ரிக்டர் அளவுக்கு மீண்டும் நிலநடுக்கம்
-
சூடான் விமான விபத்தில் 14 பேர் பலி
-
சீனா மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் பாக்., உடன் கையெழுத்து
-
சோமாலியா சிமென்ட் ஏற்றி சென்ற சரக்கு கப்பல் கடத்தல்
-
ஈரான் அமைச்சர் தொடர் பயணம்
-
3 நாளில் எண்ணெய் குழாய்கள் வெடிக்கும் புதிய கெடுவுடன் ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்