'ரிமாண்ட்'டுக்கு வந்த நெஞ்சுவலி ஜாமினுக்காக உடனே குறைந்தது; தி.மு.க., நிர்வாகி அலப்பறை
திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலர் ஆரோக்கியசாமி. இவர் மீது மணல் கடத்தல் உட்பட, பல்வேறு வழக்குகள் உள்ளன. சில நாட்களுக்கு முன், மதுபான கூடம் ஒன்றில் பா.ஜ., நிர்வாகியை தாக்கிய வழக்கில் சிக்கினார்.
அந்த வழக்கில், நேற்று முன்தினம் காலை, மணப்பாறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, 300க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். இருப்பினும், போலீசார் விடாப்பிடியாக அவரை கைது செய்து, உடல் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு சென்றதும், ஆரோக்கியசாமி, தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடனடியாக, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், டாக்டர்கள் பரிசோதனை செய்ய அனுமதிக்காமல் முரண்டு பிடித்துள்ளார்.
அமைச்சர் நேருவின் ஆதரவாளர் என்பதால், டாக்டர்கள் எதுவும் செய்ய முடியாமல் இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்த முசிறி மாஜிஸ்திரேட், டாக்டர்களிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டுள்ளார்.
டாக்டர்களோ, 'அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது. அவர் நெஞ்சுவலி என, நடிப்பதாக தெரிகிறது' என, தெரிவித்தனர். இதையடுத்து, ஆரோக்கியசாமியிடம், 'உங்களுக்கு உடல்நலம் சரியிருந்தால் தான், ரிமாண்ட் செய்து, பெயில் தர முடியும்' என, மாஜிஸ்திரேட் கூறியுள்ளார்.
மாஜிஸ்திரேட் இவ்வாறு கூறியதும், அதுவரை, நெஞ்சுவலி என்று கூறிய ஆரோக்கியசாமி, 'நான் நல்லாத்தான் இருக்கேன். லேசா தான் நெஞ்சு வலிக்குது' என, அந்தர்பல்டி அடித்துள்ளார்.
இதைக்கேட்டு கடுப்பான மாஜிஸ்திரேட், நெஞ்சுவலி நாடகம் என்பதை புரிந்து கொண்டு, அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். உடனே, மீண்டும் நெஞ்சுவலி எனக்கூறி, அரசு மருத்துவமனையில், ஆரோக்கியசாமி சிகிச்சை என்ற பெயரில் தொடர்ந்து தங்கி இருக்கிறார்.
செண்ட் ரல் ஜெயில்லேயே ஒரு எய்ம்ஸ் கட்டி ட்ரீட்மெண்ட் குடுக்கலாமே.
கொள்ளையடிக்க அரசியல் தொழிலுக்கு வருபவர்களுக்கு நடிப்புக்கலையில் தேர்ச்சியும் முன் அனுபவமும் தேவை என்று புலப்படுகிறது
இவனை எல்லாம் போஸ்ட் மார்த்தம் ரூமில் தான் அட்மிட் செய்ய வேண்டும். அப்போ தான் அட்மிஷன் வேண்டாம் என்று சொல்லி அலறி அடித்துக்கொண்டு சிறைக்கு ஓடுவான்.
ஆரோக்கியசாமி ஒன்னும் கவலைப்பட வேண்டாம் பா எப்படியாவது நம்ம ஊர் நீதிபதிகள் கிட்ட சொல்லி இதுக்கெல்லாம் ஆதாரம் இல்லை என்று தீர்ப்பு சொல்ல வச்சிருவாரு நீதித்துறை இருக்கும் வரை நீ ஒன்னும் கவலைப்படாதே
போலீஸ் அடிக்கிற அடியில் நெஞ்சுவலி மாறவேண்டும்.
நெஞ்சு வலி உண்மை என்பதை டாக்டர்கள் சோதனை மூலம் உறுதி செய்து சான்றிதழ் தந்த பின்னரே, குற்றம் சாட்டப்பட்டவர் அதனை கொண்டு நீதி மன்ற காவலிலிருந்து பெயில் பெற முடியும். டாக்டர்களை சோதனை செய்ய அனுமதிக்காத நபருக்கு அது கிடைக்காது. இந்த செய்தி ரிப்போர்ட் எங்கோ இடிக்கிறதே
திராவிட மாடல்களின் பொழப்பே அதுதானே. வழக்கில் மாட்டிக்கொண்டு, போலீஸ், கேஸ் என்று வந்தால் உடனே இவங்களுக்கு நெஞ்சு வலி எங்கிருந்து வருகிறது என்பது தெரியாது. 10 ரூபாய் பாலாஜிதான் இவன்களுக்கு குரு .
எங்க தலைவன் கலைஞன் சொல்லிக்கொடுத்த வழி.
போலி திராவிடம் நடிப்பு பாசறையில் பயிற்சி பெற்றவர்கள். அதோடு கிறிஸ்துவ கூட்டம் வேறு. இரண்டிலுமே நடிப்பு தான் முதல் தகுதி.மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
-
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்; தினமலர் நேரலை
-
கொடைக்கானல் ஏரி சாலையில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் சவாரி
-
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும்; ஈரானுக்கு ஐநா வேண்டுகோள்
-
காலி பாட்டில் திரும்பப்பெறுவதில் சிரமம்; 'டாஸ்மாக்' ஊழியர்கள் போராட்டம்
-
'ஜனநாயகனுக்கு' மதுரை பாப்பாபட்டி கிராம மக்கள் எதிர்ப்பு; கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்