சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தீர்ப்பை ஏப்ரல் 2ம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.
துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் வர்த்தகர் ஜெயராஜ் 58. இவரது மகன் பென்னிக்ஸ் 31. இருவரும் அலைபேசி விற்பனை, பழுது நீக்கும் கடை நடத்தி வந்தனர். கடந்த 2020-ம் ஆண்டு, ஜூன் மாதம் கொரோனா ஊரடங்கில் கடையை ஜெயராஜ் அரசு அனுமதித்த நேரத்தைவிட தாமதமாக மூடியதாக கூறி அவரையும், மகனையும் போலீசார் ஸ்டேஷனிற்கு அழைத்துச்சென்று தாக்கியதில் இருவரும் இறந்தனர்.
இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், பால்துரை, போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் எஸ்.ஐ., பால்துரை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். எனவே அவரை வழக்கிலிருந்து விடுவித்த நிலையில், எஞ்சிய 9 பேரும் மதுரை சிறையில் உள்ளனர்.
சி.பி.ஐ., விசாரித்த இவ்வழக்கில் கடந்த மார்ச் 23ல் மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் '9 பேரும் குற்றவாளிகள்' என தீர்ப்பளித்தது. தண்டனை விபரங்களை தெரிவிப்பதற்கு வசதியாக 9 பேரும் எந்த மனநிலையில் உள்ளனர், சிறையில் இடையூறாக நடந்து கொண்டார்களா, மருத்துவ ரீதியாக அவர்களது உடல்நிலை எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி 'சிறையில் அவர்கள் எந்த பிரச்னையும் செய்யவில்லை. மனநிலை சீராக உள்ளது' என சிறை நிர்வாகம் தரப்பில் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைக்காக 9 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் மனநலப்பிரிவில் 'அட்மிட்' ஆனார்கள். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி முத்துக்குமரன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அறிக்கை தாக்கல் செய்ய 2 நாள் அவகாசம் கேட்டார்.
இதனையடுத்து நீதிபதி, மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளித்து தீர்ப்பு அறிவிப்பதை ஏப்.,2ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் மத்திய மாநில அரசுகள் கட்டாயமாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அறிக்கை வந்தால் தான் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை அறிவிக்க முடியும் என்றார்
வாசகர் கருத்து (1)
Nancy - London,இந்தியா
30 மார்,2026 - 16:25 Report Abuse
0
0
Reply
மேலும்
-
அடுத்தடுத்து எதிர்ப்பு: அமைச்சர் அனிதா தவிப்பு!
-
காலப்பட்டில் காங்., வேட்பாளர் ஷாஜகான் ஓட்டுசேகரிப்பு
-
சேதராப்பட்டில் தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் : என்.ஆர்., காங்., தேர்தல் அறிக்கை வெளியீடு
-
திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்
-
தி.மு.க., தேர்தல் அறிக்கை தமிழக முதல்வர் வெளியீடு
-
வில்லியனுார் தொகுதியில் ரூ.424 கோடியில் வளர்ச்சி பணி சாதனை பட்டியலை வெளியிட்டு தி.மு.க., வேட்பாளர் சிவா பேட்டி
Advertisement
Advertisement