காலப்பட்டில் காங்., வேட்பாளர் ஷாஜகான் ஓட்டுசேகரிப்பு
புதுச்சேரி: காலப்பட்டு தொகுதி காங்., வேட்பாளர் ஷாஜகான் தொகுதி முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வருகிறார்.
காலப்பட்டு தொகுதி ஆலங்குப்பம் பகுதியில் கை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்த ஷாஜகான் பேசுகையில் காங்., தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி பெண்களுக்காக நிறைய திட்டங்கள் செய்துள்ளனர். புதுச்சேரி வந்து பிரசாரம் செய்த ராகுல் காங்., ஆட்சி அமைந்தால், குடும்பத்திற்கு வருடத்திற்கு 6 சிலிண்டர், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2500 ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள், வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் நிதியுதவி, வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளார். எனவே நீங்கள் கை சின்னத்திற்கு ஓட்டுப்போட வேண்டும். நான் அமைச்சராக இருந்த போது புதுநகர் பகுதியில் அனைவருக்கும் பட்டா வாங்கினோன். இந்த பகுதியில் எதிர்த்து நிற்பவர்கள் யார் என்று பாருங்கள், இப்பகுதிகளுக்கு அமைதி வேனும் என்றால் நீங்கள் கை சின்னத்திற்கு ஓட்டு போட்டு என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் எனப் பேசினார்.
மேலும்
-
கோடைகாலம் தொடங்கியதால் குடிநீருக்காக அல்லாடும் மக்கள்
-
பழமையான கோவிலில் சிற்பங்கள் உடைப்பு
-
இன்று இனிதாக... (09.04.2026) சிவகங்கை
-
காட்சிப் பொருளாக அரசு கட்டடங்கள் வீணாகிறது: பல லட்சங்கள் செலவழித்து திறந்தும்
-
கோடையிலும் விற்பனை இல்லை தென்னை சார் தொழிலாளர்கள் தவிப்பு
-
போலீஸ் செய்திகள்:திண்டுக்கல்