சேதராப்பட்டில் தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் : என்.ஆர்., காங்., தேர்தல் அறிக்கை வெளியீடு
புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.,காங்., தேர்தல் அறிக்கை வெளியீடும் நிகழ்ச்சி, காமராஜ் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று மாலை நடந்தது.
என்.ஆர்.,காங்., பொதுச்செயலாளர் ஜெயபால், அமைச்சர் லட்சுமி நாராயணன், துணை தலைவர் பக்தவச்சலம், ஆலோசகர் ராமனுஜம் ஆகியோர் முன்னிலை தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
சேதராப்பட்டில் படித்த இளைஞர்களுக்காக 800 ஏக்கரில் தொழில்நுட்ப பூங்கா அமைய இருக்கிறது. அதில், 100 ஏக்கரில் சென்னை (ஐ.ஐ.டி) உயர்தர கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் துவக்கப்படும்.
தட்டாஞ்சாவடி பகுதியில் அரசு இடத்தில் 21.30 ஏக்கரில் ஆயிரத்து 250 கோடி ரூபாய் மதிப்பீல் தகவல் தொழில்நுட்பத்திற்காக சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு 500 சதுரடியில், காலி இடம் வாங்க, 15 லட்சம் ரூபாய் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும்.
பெண் குழந்தை பிறந்தால் 50 ஆயிரம் ரூபாய் மாநில அரசு டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இது 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். முதியோர் பென்ஷன் உயர்தப்படும், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை அமைக்கப்படும்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், புதுச்சேரியில், மானியத்துடன் 2 லட்சம் ரூபாய் எலக்ட்ரிக் ஆட்டோ வழங்கப்படும். மஞ்சள் நிற ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
லிங்காரெட்டிபாளையத்தில் உள்ள சுகர் மில்லை தனியார் பங்களிப்புடன் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பொதுப்பணித்துறை சார்பில் பல இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து, 20 லிட்டர் குடிநீரை 7 ரூபாயில், விநியோகிக்கப்படும், . மேலும்,பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திடத்திட்டங்கள் செயல்படுத்த உள்ளதாக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
விளாம்பட்டியில் கட்சிக்கொடி, போஸ்டர், கொடிக்கம்பங்கள், தலைவர்கள் சிலை இல்லை: 60 ஆண்டுகளாக கடைபிடிக்கும் அதிசய கிராமம்
-
தேர்தல் செலவுக்கு பணம் இல்லாமல் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் திணறல் !
-
தினமலர் செய்தி எதிரொலி :பஸ்களில் ஏர்ஹாரன்கள் அகற்றம்
-
விஜய் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பதாக திமுக மீது திசை திருப்புகின்றனர்; திருமா குற்றச்சாட்டு
-
சேத்துாரில் ஒற்றை யானையால் ஏராளமான தென்னை மரங்கள் சேதம்:-இரவு காவல் பணிக்கும் விவசாயிகள் அச்சம்
-
மதுரை- தூத்துக்குடி புதிய அகல ரயில் பாதைக்கு ரூ.132 கோடி நிதி ஒதுக்கீடு