தி.மு.க., தேர்தல் அறிக்கை தமிழக முதல்வர் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரி தி.மு.க., தேர்தல் அறிக்கையை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

புதுச்சேரியில் இண்டி கூட்டணி சார்பில் நேற்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க., தேர்தல் அறிக்கையை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அறிவிப்புகள்.

*உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கங்கள் அமைத்து பயிற்சி வழங்கப்படும்.

*​இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க 'தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு' நடத்தப்படும்.​

*ஆடைகள் தயாரிக்கும் தொழில் மையங்கள் உருவாக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உதவிகள் செய்யப்படும்.

*​அரசு பேஷன் தொழில்நுட்பக் கல்லூரி துவங்கப்படும்.​

* புதுச்சேரி மற்றும் காரைக்கால் நகராட்சிகள் மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும்.​

* மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கவும், காரைக்காலில் நவீன மீன் பதப்படுத்தும் பூங்கா அமைக்கப்படும்.

*.​முழுமையான பாதாள சாக்கடைத் திட்டம் மற்றும் தரமான கிராமச் சாலைகள் உறுதி செய்யப்படும்.​

*முதியோர் நலமுடன் வாழ 'மகிழ்ச்சி இல்லம்' திட்டம் உருவாக்கப்படும்.​

* விவசாய மேம்பாட்டிற்காக நவீன அரிசி ஆலைகள் மற்றும் தானியக் கிடங்குகள் அமைக்கப்படும்.​

Advertisement