மேல்சித்தாமூர் பார்சுவநாதர் கோவில் தேர் திருவிழா

செஞ்சி: மேல்சித்தாமூர் பார்சுவநாதர் ஜெயின் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.

செஞ்சி அடுத்த மேல்சித்தாமூரில் தமிழக ஜெயினர்களின் தலைமையிடமான ஜின கஞ்சிமடம் உள்ளது. இங்குள்ள பார்சுவநாதர் கோவிலில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு 10 நாள் விழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 7ம் நாள் விழாவாக நேற்று மகாவீர் ஜெயந்தி மற்றும் தேர் திருவிழா நடந்தது.

நேற்று காலை 9:00 மணிக்கு பார்சுவநாதரை தேரில் எழுந்தருளச் செய்து, மடாதிபதி லட்சுமி சேன பட்டாரக பட்டாச்சாரிய சுவாமிகள் தலைமையில் வடம் பிடித்தல் துவங்கியது. திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர்.

விழாவில், முன்னாள் அமைச்சர்கள் சண்முகம், தி.மு.க., மஸ்தான் மற்றும் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஜெயின் சமூகத்தினர் பங்கேற்றனர்.

மடத்தின் சார்பிலும், ஜெயினர்களின் வீடுகளிலும், ஜெயினர் அமைப்புகள் சார்பிலும் பல்வேறு இடங்களில் அன்னதானம், குளிர்பானம், மோர் வழங்கினர்.

Advertisement