சீட்டும் இல்லை; கொடுத்த காசும் போச்சு: மக்கள் நிதி மய்யம் ஆனது மக்கள் நீதி மய்யம்
சென்னை: தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட பணம் திருப்பி தரப்படாது. 60 பேரிடம் இருந்து பெறப்பட்ட ரூ.30 லட்சம் கட்சி வளர்ச்சி நிதிக்கு சென்றுவிட்டது என்பதால் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்து திமுக தன் வசப்படுத்தியது. அதுமட்டுமின்றி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் திமுக கட்டளையிட்டதால், தன் விருப்பமின்மையை வெளிப்படுத்தும் வகையில், " தேர்தலிலேயே போட்டியிடவில்லை" என்று ஜகா வாங்கிவிட்டார். கமல் எடுத்த முடிவு,"அக்கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் பரவலான ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
முன்னதாக தேர்தல் நெருங்குவதை கருத்தில் கொண்டு, தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து மக்கள் நீதி மய்யம் விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது. விண்ணப்பிக்கும் ஒவ்வொருவரும் 50 ஆயிரம் ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 60க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து உரிய கட்டணத்தையும் செலுத்தினர். தேர்தலில் போட்டியிடாததால் விண்ணப்ப கட்டத்தை கட்சி நிர்வாகிகள் திரும்ப கேட்டிருந்தனர்.
தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட பணம் திருப்பி தரப்படாது. 60 பேரிடம் இருந்து பெறப்பட்ட ரூ.30 லட்சம் கட்சி வளர்ச்சி நிதிக்கு சென்றுவிட்டது என்பதால் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
கிறுக்கனையெல்லாம் நம்பி அரசியல் செய்தால் இந்த நிலை தான் ஆகும்.
இப்படி ஏமாற்றி பணம் வசூல் செய்ததை எதிர்த்து யாராவது வழக்கு போட்டு இந்த ....... ஏமாற்றுக்காரரை கோர்ட்டுக்கு இழுக்க முடியுமா?
After Kamalakasan follows Stalin and got trained in swallowing.
இவன் ஒரு மண் குதிரை. ஆற்றில் அடித்து கொண்டு போயிடும்.
நீதிமன்றம் செல்ல வேண்டும். 2014 அல்லது 2019 இல் இந்த மனுஷன் தேர்தலில் நின்ற போது காண்பித்த சொத்து மதிப்பு 300 கோடி ரூபாய்க்கு மேல். இப்போ அந்த சொத்து 600 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். இந்த 30 லட்சம் ஜுஜுபி.
weekend party expenses
இது திட்டமிட்ட சதி. எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டாருங்க. நன்றி.....
கருணாநிதி கமலிடம் கற்றுக்கொள்ளவேண்டும் எப்படி கொள்ளை அடிப்பது என்று. தி மு க தோற்றுவிட்டது இவரிடம்.
இந்த விலங்காதவர நம்பினவங்க அவ்வளவுதான்
இவரையெல்லாம் தேர்ந்தெடுத்து பதவியில் உட்கார்த்தினால் - கெஜ்ரி, லாலு, DMK யை விட PERFORMANCE சூப்பர் ஆக IRUKKUM.மேலும்
-
பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு; ஆதவ் அர்ஜூனா மனு நிறுத்தி வைப்பு
-
தமிழகம் தான் டபுள் டிஜிட் வளர்ச்சி; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
திருநெல்வேலியில் நாளை விஜய் பொதுக்கூட்டம்: 51 நிபந்தனை விதித்த போலீசார்
-
அதிகார மமதையில் மக்களுக்கு நிகழும் கொடுமைகள்: கமல் காட்டம்
-
இனி ஆந்திர தலைநகர் அமராவதி: அதிகாரப்பூர்வமாக அரசிதழ் வெளியீடு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு