வெளிமாநில மதுபாட்டில் கடத்திய நபர் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் பைக்கில் வெளிமாநில மது பாட்டில்கள் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆனந்தி, சப் இன்ஸ்பெக்டர் லியோ சார்லஸ் தலைமையிலான போலீசார், வி.அகரம் பாட்டை பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்ததில், 667 புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்திச் சென்றது தெரியவந்தது.

விசாரணையில், அவர், விழுப்புரம் அடுத்த ஒருகோடி கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன், 41; என்பது தெரியவந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து ஸ்கூட்டர் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

Advertisement