தன் பெயரில் களம் இறங்கிய சுயேச்சை; 100 பேர் வந்தாலும் கவலை இல்லை என்கிறார் செந்தில் பாலாஜி
கோவை: என் பெயரில் 100 பேர் வந்தாலும் பரவாயில்லை, என செந்தில் பாலாஜி கூறினார்.
கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க., சார்பில் வேட்புமனுத்தாக்கல் செய்த பிறகு செந்தில் பாலாஜி அளித்த பேட்டி: கோவை மாவட்டத்தின் வளர்ச்சி தான் எங்கள் இலக்கு. கோவைக்கு கடந்த 5 வருடங்களில் அரசு நிறைவேற்றிய திட்டங்களையும், செய்ய போகும் திட்டங்களையும் வாக்காளர்களிடம் சொல்லி வாக்கு கேட்போம். நாங்கள் என்ன செய்தோம் என்பதை பட்டியலிடுகிறோம்.
அ.தி.மு.க., ஆட்சியில் அப்படி செய்திருந்தால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல சொல்லுங்கள்.
தேர்தலுக்காக எங்களுக்கு கரூரில் இருந்து ஆட்கள் வரவேண்டிய அவசியமில்லை. கோவையில் உள்ள எங்கள் கட்சி நிர்வாகி ஒவ்வொருவரும் போர் படை சிப்பாய்கள். அ.தி.மு.க., வேட்பாளர் அம்மன் அர்ஜூனனும் வெளியூர் தான். அவர் 25 வருடங்களுக்கு முன்பு கோவை வந்துள்ளார். நான் 5 வருடங்களுக்கு முன்பு கோவை வந்துள்ளேன்.
அவரைவிட கோவையை பற்றியும், இந்த தொகுதியை பற்றியும் நான் நன்கறிவேன். என்னுடைய பெயரிலேயே இந்த தொகுதியில் இன்னொருவர் சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார். பரவாயில்லை. இன்னும் 100 பேர் கூட வரட்டும். மக்களுக்கு சின்னம் எது, வேட்பாளர் யார் என்று தெரியும். களத்தில் பார்த்துக் கொள்ளலாம். கோவை தெற்கு தொகுதிக்கு நான் கடந்த ஒரு மாதம் முன்பு தான் விருப்ப மனு கொடுத்தேன்.
எதிர்க்கட்சிகள் சொல்வது போல 6 மாதங்களுக்கு முன்பு முடிவாகவில்லை. அப்போதே முடிவாகியிருந்தால் பல நிகழ்ச்சிகளில் கலந்திருப்பேன். முதலமைச்சர் கட்டளையிட்டதால் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறேன். கோவையில் செந்தில் பாலாஜி வந்து தான் தி.மு.க.,வை வெற்றி பெற வைக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு செந்தில் பாலாஜி சென்றால் இங்கு 100 செந்தில் பாலாஜி வருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி என்ற பெயரில் இன்னொருவர் சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார். செந்தில்குமார் என்ற பெயரில் நான்கு பேரும், செந்தில் பிரபு என்ற பெயரில் ஒருவரும் சுயேட்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர். பாலாஜி என்ற பெயரில் ஒருவரும் மனு தாக்கல் செய்துள்ளார்.
கண்டிப்பாக கோவை மக்கள் ஒட்டு உனக்கில்லை.
மே ஐந்தாம் தேதி தெரிந்துவிடும்.
அன்புள்ள பொது மக்களே இவனை ஜெயிக்க வைத்து விடாதீர்கள். அவன் செஞ்ச பாவத்துல பங்கேற்ற மாதிரி ஆயிரும்.
மனித பட்டி உண்டா
கோவை மாநகருக்கு களங்கம் ஏற்படாமல், பணத்திற்கும் குவார்ட்டருக்கும் ஓசி பிரியாணிக்கும் அடிமையாகாமல், சிறந்த நபரை கோவை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
"பத்துரூபாய் "பாலாஜியை வெல்ல முடியுமா
கரூரில் வேலை முடிந்து இங்கேயா?
மூஞ்சியில் எழுதி ஒட்டி இருக்கு , அகத்தின் அழகு முகத்தில் தெரியும் பழமொழி
இறக்கியதே நீங்கதானுங்கோ....கோவை மக்கள் மாங்கா மடையர்கள்னு நெனைச்சிட்டீங்களோ...பத்து ரூவா, கரூர் 41 பேர் இறந்தது எல்லாம் விதி கோவை தெற்குல இறக்கிறிச்சிஞ்கோ....!!!
ஐயோ எங்கெங்கேயோ போற ஏழரை எல்லாம் கோவைல வந்து கும்மாளம் போட போறாங்களே ..தாங்குமா இந்த ஊரு ....கண்டிப்பா கோவையை பூர்வீகமா கொண்டவங்க போடமாட்டாங்க ...ஆனா எங்க ஊர்லதான் எவனும் இல்லியே பூரப்பயலும் வெளிய இருந்து வந்தவங்க அவுங்கள அவுங்க பாஷைல கவனிச்சா போதும் பத்தா குறைக்கு அந்த தொகுதில சிறுபான்மையினர்தான் வெற்றி தோல்விய நிர்ணயம் செய்வாங்க ... பாப்போம் என்ன நடக்குதுன்னு ஆண்டவன்தான் காப்பாத்தணும் ...DMK இந்த தடவ தோத்தாலும் இவர் ஜெயிச்சிட்டா கோவைக்கு ஏழரைதான் ...எல்லா முன்னாள் மந்திரிகள் இவர்பேச்சை கேப்பாங்க ..வேலு மணி முக்கியமாமேலும்
-
10 ஆண்டுகளாக நிரப்ப படாத தூய்மை பணியாளர்கள்:குப்பையால் நிரம்பி வழியும் ஊராட்சிகளால் மக்கள் பாதிப்பு
-
போலீஸ் செய்தி: மூதாட்டி மாயம்
-
தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது
-
இளைஞர் மீது தாக்குதல்: தி.மு.க., நிர்வாகி கைது
-
மேம்பாலம், பூங்கா கட்டினால் தான் கமிஷன் கிடைக்கும்:சொல்கிறார் சசிகலா/dc
-
விழிப்புணர்வு நிகழ்ச்சி