நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஏர் கலப்பையுடன் மனு தாக்கல்
திருவள்ளூர்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர், ஏர் கலப்பையுடன், மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தார்.
திருவள்ளூர் சட்டசபை தொகுதியில், நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கியது. முதல் நாளான நேற்று, நாம் தமிழர் கட்சி சார்பில் செந்தில்குமார், மாட்டு வண்டியில், ஏர் கலப்பையுடன் ஊர்வலமாக வந்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு, 100 மீட்டர் தொலைவில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
வேட்பாளருடன் ஐந்து பேரை மட்டும் நடந்து செல்ல அறிவுறுத்தினர். பின், வேட்பாளர் செந்தில்குமார், திருவள்ளூர் ஜெ.என்., சாலையில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரனிடம், வேட்பு மனு தாக்கல் செய்தார்.
நேற்று காலை 10:00 மணிக்கு, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திரன், கட்சி நிர்வாகிகளுடன் வந்தார். பின், வேட்பாளர் சந்திரன் உட்பட ஐந்து பேர் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திரன், வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் கனிமொழியிடம் வழங்கினார்.
மேலும்
-
10 ஆண்டுகளாக நிரப்ப படாத தூய்மை பணியாளர்கள்:குப்பையால் நிரம்பி வழியும் ஊராட்சிகளால் மக்கள் பாதிப்பு
-
போலீஸ் செய்தி: மூதாட்டி மாயம்
-
தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது
-
இளைஞர் மீது தாக்குதல்: தி.மு.க., நிர்வாகி கைது
-
மேம்பாலம், பூங்கா கட்டினால் தான் கமிஷன் கிடைக்கும்:சொல்கிறார் சசிகலா/dc
-
விழிப்புணர்வு நிகழ்ச்சி