மேம்பாலம், பூங்கா கட்டினால் தான் கமிஷன் கிடைக்கும்:சொல்கிறார் சசிகலா/dc
காரியாபட்டி:''மேம்பாலம், பூங்கா கட்டினால்தான் கமிஷன் கிடைக்கும். அதனால கிராமத்து பக்கம் எதையும் கண்டுக்க மாட்டாங்க,'' என அ.இ.பு. த.மு.க., தலைவர் சசிகலா திருச்சுழியில் தெரிவித்தார்.
திருச்சுழி தொகுதியில் அவரது கட்சி வேட்பாளரை ஆதரித்து அவர் பேசியதாவது:
திருச்சுழி தொகுதியில் எங்கு பார்த்தாலும் பொட்டல்காடாக இருக்கிறது. மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தமிழ்நாட்டு நிதி அமைச்சராக இருக்கக்கூடிய இவர் ஏன் அதை செய்யவில்லை. ரூ 8 ஆயிரம் கொடுக்குறோம் என சொல்றாங்க. இது தேர்தலுக்காக சொல்லக்கூடிய, மக்களை ஏமாற்றக்கூடிய வார்த்தை. அது மட்டும் அல்ல தமிழகத்தோட கடன் 12 லட்சம் கோடி. இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.
வெளிநாட்டு முதலீடு வருதுன்னு சொன்னாங்க. இதுவரைக்கும் வரல. மருத்துவமனைகளில் டாக்டர் இல்ல. கூடுதலா டாக்டரை நியமிச்சா சம்பளம் கொடுக்கனும் . அதுக்கு அரசாங்கத்திடம் பணம் இல்லை. அதனாலதான் இதுவரைக்கும் யாரையும் நியமிக்கல. ஏழை மக்களை வஞ்சிக்கிறது தான் திராவிட மாடல் ஆட்சி என்றார்.
மேலும்
-
வலிப்பால் குழந்தை பலி
-
வறட்சியால் காயும் பயிர் விவசாயிகள் வேதனை
-
116 வேட்பாளர்களில் 21 பெண்கள் மட்டுமே! மேடை முழக்கம் வெறும் கோஷம் ------------------------------ அம்பலமான கட்சிகள் 'வேஷம்'
-
கழிவுநீர் கால்வாய் தரைப்பாலம் சேதம்
-
ஆட்டு வியாபாரியிடம் ரூ. 69,400 பறிமுதல்
-
அரசு திட்டங்கள் தொடர தி.மு.க.,வை ஆதரிக்க வேப்பனஹள்ளி தி.மு.க., வேட்பாளர் பிரசாரம்