தி.மு.க., வேட்பாளர்களுக்கு வரவேற்பு

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் தி.மு.க., வேட்பாளர்கள் வசந்தம் கார்த்திகேயன், வசந்தவேல் ஆகியோருக்கு கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

தி.மு.க. வேட்பாளர்களாக ரிஷிவந்தியம் தொகுதிக்கு வசந்தம் கார்த்திகேயன், உளுந்துார்பேட்டை தொகுதிக்கு வசந்தவேல் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 2 வேட்பாளர்களும் நேற்று உளுந்துார்பேட்டைக்கு வருகை தந்தனர்.

அப்போது தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர்கள் வைத்தியநாதன், ராஜவேல், முருகன், நகர செயலாளர் டேனியல்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர் செல்லையா மற்றும் கூட்டணி கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

Advertisement