கலெக்டர் ஆபீசில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி 

தேனி:தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்ப உள்ள வாக்காளர்பட்டியல் சரிபார்க்கும் பணி நடந்தது.

தேர்தல் ஆணையம் சில நாட்களுக்கு முன் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் மாவட்டத்தில் ஆண்கள் 5,06,058 பேர், பெண்கள் 5,35,303 பேர், இதரர் 178 பேர் என மொத்தம் 10,41,539 பேர் இடம் பெற்றுள்ளனர். தேர்தல் ஓட்டுப்பதிவின் போது தேர்தல் ஆணையம் சார்பில் ஒட்டுச்சாவடிகளுக்கு வாக்காளர் பட்டியல் அனுப்பபடும். கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்ப உள்ள வாக்காளர்பட்டியல்களில் அனைத்து பக்கங்களிலும் அச்சிடப்பட்டுள்ளனவா, வரிசை எண் சரியாக உள்ளனவா என சரிபார்க்கும் பணி நடந்தது. இந்த பணியில் சுமார் 15க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement