சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியருக்கு ஓய்வூதிய உயர்வு தொகை இழுபறி ; சங்கங்கள் புகார்
சிவகங்கை:தமிழகத்தில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சம்பள உயர்வு தொகை விடுவித்தும், ஓய்வூதியர்களுக்கு சேரவில்லை என புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் பள்ளி சத்துணவு, அங்கன்வாடி மையங்கள் மூலம் அமைப்பாளர், சமையலர், உதவியாளர் பணியில் இருந்து ஓய்வு பெற்று 1 லட்சம் பேர் ஓய்வூதியமாக மாதம் ரூ.2,000 வரை பெற்று வருகின்றனர்.
இவர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி தர வேண்டும் என தேர்தலுக்கு முன் ஓய்வூதிய சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து பிப்., 13 அன்று சமையலருக்கு ரூ.3,400, உதவியாளருக்கு ரூ.3,200, உதவியாளருக்கு ரூ.3,000 என உயர்த்தி வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், 2026 பிப்.,க்கு பின் வழங்கப்பட்ட ஓய்வூதிய தொகையில் உயர்த்தப்பட்ட தொகை விடுவிக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.
கலெக்டர்களால் ஓய்வூதியம் இழுபறி
அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் பாண்டி கூறியதாவது: அரசு பிப்., 13 ம் தேதி வெளியிட்ட அரசாணை நாள் முதல் ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஓய்வூதிய உயர்வு தொகையை வழங்கவில்லை. இது குறித்து நிதித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஓய்வூதிய உயர்வு தொகை அந்தந்த கலெக்டர்களுக்கு விடுவித்து விட்டோம். அவர்கள் தான் விடுவிக்க வேண்டும் என தெரிவித்து விட்டனர் என்றார்.
மேலும்
-
காட்சிப்பொருளாக வணிக வளாகங்கள் :மகளிர் குழுக்கள் வேதனை
-
விரிவாக்கம் செய்யாத ரோட்டில் திணறல்: பல கிராம மக்கள் வேதனை
-
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா அம்பாள் ஊஞ்சல் உற்சவம்
-
ஆற்றில் கட்டடக்கழிவு குவிப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள்
-
சூலுாரை மிஞ்சுமா வால்பாறை: தங்க காசு அறிவிப்பால் குஷி
-
சித்தி புத்தி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்